News about by Producer Abirami Ramanathan UNNODU KA

0

 

Maya paired opposite Aari in ‘Unnnodu Ka’ . 
News from Abirami Ramanathan about Unnodu Ka

News from Abirami Ramanathan about Unnodu Ka

 
 
Unnodu Ka’  is fast emerging as a smooth romantic entertainer thanks to efforts of the production company to enhance the style of the film. Director R K is all set  to launch his maiden project ‘Unnodu Ka’ in style from 20th of this  month with a grand pooja. ‘ It is a great moment to announce this project.The script which we are filming now is penned by Ramanathan sir him self. The amalgamation and accumulation of his experience is reflected in every aspect of the script.This film will explain the feel good factor in style and perfection. The script has ample space for the artiste to perform, The music Director to score, and the Director to improvise. Iam extremely delighted to work with Aari who has got a very great potentiality to mark him self in this competitive field. Maya a Dentist by profession and heroine of Darling 2 is the heroine of the film . The spirit and energy she displayed in the photo session is true to the spirit of the film itself. Bala saravanan and  Misha Ghoshal play roles that are of very big importance in this film.With Prabhu sir and Oorvasi madam around we have got a perfect blend of youth and experience to carry the film forward. The huge star cast will keep the audience engaged all through. Music Director Sathya is all set to recreate his magic of ‘Engeyum eppothum’ i will say. Naga saravanan is the cinematographer and  his experience will come very handy in delivering the film in style in perfection and in time i assure.Director R K  possess huge potentiality as a Director .’Unnodu Ka’ will be a mid summer family entertainer ‘declared  Nallamai Ramanathan with confidence.   
 


திரை வர்த்தகத்தில் நீங்கா புகழ் பெற்ற அபிராமி திரை அரங்கு நிறுவனத்தினர் 2016 ஆண்டை சற்று பலமாகவே துவக்கி உள்ளனர். பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் சித்திரமான ‘உன்னோடு கா’ என்ற படத்தை பிரம்மாணடமான பூஜையுடன்  துவக்கி  உள்ளனர்.பஞ்சாமிர்தம் திரைப்படம் மற்றும் பிரபல தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளான தெய்வ தரிசனம், சுற்றுலா வாங்க ஆகியவற்றை தயாரித்த திருமதி நல்லமை ராமநாதன் தயாரிப்பில்,புதிய இயக்குனர் ஆர் கே இயக்க , பிரபல ஒளிப்பதிவாளர் ஷக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய,’எங்கேயும் எப்பொழுதும்’  படத்தின் பாடல்கள் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த சத்யா இசை அமைக்க, அபிராமி ராமநாதன் கதை அமைக்கிறார்.

திரை உலக வர்த்தகத்தில் அனுபவம் வாய்ந்த அவருடைய கதை எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்ப்பார்க்க படுகிறது. இன்று 20 ஆம் தேதி , அபிராமி மெகா மாலில் பூஜையுடன் முதல் நாள் படப்பிடிப்பு துவங்குகிறது.

திரை உலகில் மிக மதிக்க கூடியவரும் , 300 படங்களுக்கு மேல் வாங்கி விநியோகம் செய்தவருமான அபிராமி ராமநாதன் ரஜினிக்காந்த் நடித்த ராஜாதி ராஜா முதல் சமீபத்தில் வெளி வந்த ரஜினி முருகன் வரை தொட்டதெல்லாம் பொன்னாகும் உள்ளமும் , கையும் படைத்தவர். அவருடைய நீண்ட வெற்றிப் பட்டியலில்  கமலஹாசன் நடித்த ‘உன்னைப் போல் ஒருவன் ‘ சூர்யா நடித்த ‘ஐயன்’ ஆகியப் படங்களும் அடக்கம். திரை அரங்குகளின் நவீன நிர்மாணத்திலும் , வெளி நாட்டில் இருக்கக் கூடிய சிறந்த பொழுதுப் போக்கு அமசங்களையும் கொண்ட  அபிராமி வணிக வளாகத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியிலும் அவருடைய உழைப்பு பிரதிபலிக்கும். விநியோகத்  துறையில் தனக்கென ஒருத் தனிப் பாதையை வகுத்துக் கொண்ட இவர் தேசிய அளவில்  திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களில் முக்கியமானவர் ஒருவர்.

 

‘உன்னோடு கா’ படத்தின் கதையை அபிராமி ராமநாதன் சார் எழுதி இருக்கிறார்.ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய அனுபவமும் நகைசுவை திறனும் வெளிப் பட்டு இருக்கிறது. சேமித்து வைத்து இருக்கும் அனுபவம் பொக்கிஷமாய் ரசிகர்களுக்கு கிடைக்கிறது. 

இந்த கதை குடும்பத்தாருடன் உற்சாகமாய் பார்த்து மகிழ வேண்டிய படமாகும்.’உன்னோடு கா’ படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு நடிக்க சரியான கதை களமும்,இனிமையான பாடல்கள் தர இசை அமைப்பாளர் சத்யாவுக்கு உகந்த காட்சி அமைப்பும்,ஒரு  இயக்குனருக்கு காட்சி அமைப்பை விஸ்தாரமாய் யோசிக்க அருமையான கதை அமைப்பும் இருக்கும்.
 
 தனித்திறமை கொண்ட ‘நெடுஞ்சாலை’ ஆரி இந்தப் படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க  உள்ளார். அவருடைய திறமையும் கடின உழைப்பும் அவரை இன்னமும் உயர்த்தும். பல் மருத்துவரும் , டார்லிங் 2 படத்தின் நாயகியுமான மாயா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். விளம்பரத்துக்கான புகைப்பட நிகழ்ச்சியில் அவர் காட்டிய உறசாகமும் , உத்வேகமும் படமெங்கும் நிறைந்து இருக்கும் என நம்புகிறேன்.பால சரவணன் மற்றும் மிஷா கோஷல் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
 
இவர்களோடு பிரபு சாரும் , ஊர்வசி மேடமும் இணைந்து நடித்து இருப்பது இந்தப் படத்துக்கு இளமையும் அனுபவமும் ஒருங்கிணைந்த ஒரு வண்ணத்தை தரும்.சக்தி சரவணன் ,இனிமையான இசைக்கு உத்திரவாதம் தரும் சத்யா, துடிப்புடன் வித்தியாச சிந்தனையுடன்  அறிமுகமாகும் இயக்குனர்  ஆர் கே என்கிற திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள்  உறுதுணையாக என்னுடன் இருப்பதில் எனக்கு மட்டற்ற பெருமை’ என்று உற்சாகத்துடன்  கூறினார் தயாரிப்பாளர் நல்லமை ராமநாதன்.

 

Share.

Comments are closed.