Upcoming Movie – BAYAM ORU PAYANAM

0
Upcoming Movie  – BAYAM ORU PAYANAM

Upcoming Movie Bayam Oru Payanam

Upcoming Movie Bayam Oru Payanam

பயம் ஒரு பயணம்
 
​​​​​​​​
ஆக்டோஸ்பைடர் புரடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் இருவரும் தயாரிக்க, பரத் , விஷாகா சிங் , மீனாக்ஷி தீட்ஷித் நடிப்பில் மணி ஷர்மா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பயம் ஒரு பயணம் . 
 
“இது ஒரு பேய்ப் படம்தான். ஆனால் வழக்கமான பேய்ப் படங்களில் எல்லாம் ஒரு பங்களா அல்லது வீட்டுக்குள் பேய்  இருக்கும். அங்கே போகிறவர்களுக்கு பிரச்னை வரும் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு காட்டுக்குள் எங்கே இருந்து எப்போது வேண்டுமானாலும் பேய் வரும். நீங்க தப்பிக்கவே முடியாது ” என்கிறார் இயக்குனர் மணி ஷர்மா 
 
அப்படி என்ன கதை ?
 
“வனவியல் புகைப்படக்கார இளைஞர் ஒருவர் , காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்குள் தங்கி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் . ஆறு மணி நேரத்துக்குள் அந்தக் காட்டைக் கடந்து அவர் வரவேண்டும். ஆனால் மூன்று நாட்கள் ஆகிறது . அதிலும் ஒரு இரவு என்பது முக்கியமானது . 
 
அடர்ந்த காட்டில் தரையே வீடாகவும் வானமே கூரையாகவும் உள்ள சூழலில் அந்த இரவில் பேயிடம் சிக்கும் அந்த புகைப்படக்காரருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் கதை” என்கிறார் அவரே .
 
 
தொடர்ந்து பேசும்போது “பொதுவாக இப்போது பேய்ப் படம் என்றால் அதை காமெடி கலந்து எடுப்பது எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது . ஆனால் இது முழுக்க முழுக்க சீரியசான பேய்ப் படம் . காமெடியும் இருந்தாலும் திகில்தான் இந்தப் படத்தின் பலம் .
 
விஷாகா சிங் நாயகியாகவும் பேயாகவும் நடிக்கிறார் . நாயகனின் மனைவியாக — இன்னொரு கதாநாயகியாக மீனாக்ஷி தீட்ஷித் நடிக்கிறார் . 
 
அண்மைக்  காலமாக காமெடி கேரக்டரில் அதிகம் நடித்து வந்த நடிகை ஊர்வசி இந்தப் படத்தில்  விசாகாவின் அம்மாவாக ஒரு சீரியசான  கேரக்டரில் நெகிழ்ச்சியூட்டும்படி நடித்துள்ளார். அவரது கணவராக ஜான் விஜய் நடிக்கிறார் . படத்தின் வில்லன் இவர்தான் . 
 
நாயகனின் நண்பனாக முனீஸ்காந்த் நடிக்க , மற்றும் சிங்கம் புலி , யோகிபாபு போன்றோரும் நடிக்கிறார்கள்” என்கிறார் .உற்சாகமாக 
 
” படத்தில் நான்கு இனிமையான பாடல்கள் இருக்கிறது .  படத்தின் பெரும்பகுதியை  மூணாறு காட்டுப் பகுதியில் அடர்ந்த காட்டில் இரவிலேயே எடுத்தோம் . அதுவும் அட்டைக் கடிக்கு பயந்தபடி . அதுவே எங்களுக்கு ஒரு திகில் அனுபவமாக இருந்தது. 
 
ஆனால் படத்தில் இந்த இரவு நேர வன காட்சிகள் ரசிகர்களுக்கு இதுவரை உணர்ந்திராத அனுபவத்தைத் தரும் .”என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் துரையும் சண்முகமும் . 
 
BAYAM ORU PAYANAM
OCTOSPIDER PRODUCTION
 
 

     CHIEF TECHNICIANS

DIRECTOR  –    MANISHARMA
D.O.P –             I.ANDREW
MUSIC-            Y.R.PRASAAD
EDITOR –          LVK.DASS DANIEL
ART –               M.R. KARTHIKRAJKUMAR 
CHOREOGRAPHER  – SHANKER AIYA
STUNT  –          STUNNER SAM
LYRICS –          MOHANRAJ,
                       MANI AMUDHAVAN
MANAGER –    ANBALAGAN
PRO –              SURESHCHANDRA
PRODUCERS  –  S.DURAI, S SHANMUGAM
 
ARTIST
HERO –                BARATH, CHARACTER NAME -RAM
HEROINE –           VISHAKHA SINGH  CHARACTER NAME- ABINIYA
HEROINE 2 –         MEENAKSHI DIXIT  CHARACTER NAME – ANU
 
VELLAN  –            JOHN VIJAY CHARACTER – G 
 
SUPPORTING ARTIST –  RAMADASS
 
COMEDY –          SINGAM PULLI
                         , YOGIBABU,
                           LOLLU SABA MANOHAR
                          KINGKONG
                          MADHUMITHA
 
MOTHER CHARACTER –  URVASHI
FATHER CHARACTER –   GANAVEL
Share.

Comments are closed.