Pirated DVD of Manithan movie was screened in Private Bus

0

Pirated DVD of Manithan movie was screened in Private Bus.

MANITHDAN screened in private Bus

MANITHDAN screened in rivate Bus

 

Coimbatore to Chennai bound CJSSB Travels bus was exhibiting “Manidhan” movie using pirated DVD in their bus. An alert had been made by a passenger from the bus to Nadigar Sangam.  Nadigar Sangam had informed the Police at Koyambedu Police Station and Video Piracy Cell at Aynavaram. Video piracy Inspector Mr.Nandakumar and St.Thomas Mount Inspector Mr.Mahendran had raided the bus and have arrested one Mr.Kathirvelan aged 36 S/o Mr.Kumaran of Marungapuri, Trichy.

தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி வேட்டை
​ ​பஸ்ஸில் சிக்கியது ‘மனிதன்’ படம்
நேற்று இரவு அவினாசியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த CJS – BSS வண்டி எண் TN37AH7997 என்ற தனியார் பஸ்ஸில் புத்தம் புது திரைப்படமான ‘மனிதன்’  திரைப்படம் ஒளிபரப்புவதை பயணி ஒருவர் நடிகர் சங்க பொது செயலாளர் ‘விஷாலு’க்கு தெரியப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து ‘விஷால்’ மற்றும் பொருளாளர் ‘கார்த்தி’ ஆகியோரின் புகாரின் அடிப்படையில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ‘ஸ்ரீமன்’ மேற்பார்வையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஜெயலட்சுமி IPS அவர்களின் உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் திரு.மகேந்திரன் மற்றும் திரு.நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயலுக்கு விரைந்து சென்று பஸ்ஸை மடக்கி பிடித்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தனியார் பஸ்ஸில் புதிய படம் ஒளிபரப்புவதை பிடிக்கபடுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் ‘தெறி’ படம் ஒளிபரப்பியது பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share.

Comments are closed.