“ORU MELLIYAKODU” Releasing on 1st July- 2016.

0

“ORU MELLIYAKODU” Releasing on 1st July- 2016.

"ORU MELLIYAKODU" Releasing on 1st July- 2016.

“ORU MELLIYAKODU” Releasing on 1st July- 2016.

 

 ஒரே ஒரு இரவில் நடக்கும் கதைதான் இந்தப் படம். பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா கொலை செய்யப்பட, அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்தவதற்காக பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென அவருடைய உடல் காணாமல் போய்விடுகிறது. மனிஷாவின் கணவரான ஷாம் மீது சந்தேகம் கொண்டு போலீஸ் அதிகாரியான அர்ஜுன் அவரை தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். காணாமல் போன மனிஷாவின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். அதன் பின் என்ன நடந்து என்பதுதான் படத்தின் பரபரபப்பான திரைக்கதை. படத்தின் முடிவு ரசிகர்கள் யாருமே யூகிக்க முடியாத ஒரு முடிவு.
அறிமுகமான காலத்திலிருந்தே போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் அர்ஜுனுக்கு அல்வா சாப்பிடுவது போல. இந்தப் படத்திலும் அந்தக் கதாபாத்தில் சர்வசாதாரணமாக நடித்திருக்கிறார். ஷாமை விசாரிக்கும் காட்சிகள் அனைத்திலும் கம்பீரமான போலீஸ் அதிகாரி கண் முன் நிற்கிறார். ஆக்ஷனில் அதிரடியான போலீஸ் அதிகாரியாக பார்த்த அர்ஜுன் இந்தப் படத்தில் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அதிரடி காட்டியிருக்கிறார்.
தன்னை விட மூத்த வயதுடைய மனிஷா கொய்ராலாவைத் திருமணம் செய்து கொண்டாலும் இன்னொரு பக்கம் அக்ஷா பட்டை காதலித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் ஆரம்பம் முதலே ஷாமை வில்லனைப் போலவே தெரிகிறார். எந்த விதமான கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஷாம்.
மனிஷா கொய்ராலா சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம். ஷாமின் காதலியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷா பட் தமிழுக்கு வந்துள்ள அழகான அறிமுகம்.  அர்ஜுனின் வலது கரமாக படத்தின் இயக்குனர் A.M.R.ரமேஷும் விசாரணை அதிகாரியாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இளையராஜாவின் இசை வழக்கம் போலவே பின்னணி இசையில் படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.
அதிகமான காட்சிகள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தாலும் அது தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் கிருஷ்ணஸ்ரீராமும், படத் தொகுப்பாளர் கிருஷ்ண ரெட்டியும் இயக்குனருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். மருத்துவமனையை ‘செட்’ என்று சொன்னால் நம்பவே முடியாது.
‘ஒரு மெல்லிய கோடு’ –   மிரட்டலான த்ரில்லர்.
omk omk1 omk2 omk3 omk4 omk5 omkd
Share.

Comments are closed.