Samantha Inagurated “VCARE” 32nd Branch @ Madurai
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி..
இன்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா.
சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் அதிக அளவில் மக்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதில் மேடை தகர்ந்தது. யாரோ ஒருவர் சமந்தா திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சொகுசு காரின் டயரைக் குத்திக்கிழித்து பஞ்சராக்கினர். ஒலி பெருக்கி கருவிகள் சரிந்தன. பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு மாடிக்கு கொண்டு சென்ற நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். பின் மாற்றுக்காரில் சமந்தா அனுப்பிவைக்கப்பட்டார். வீகேரின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி கலந்து கொண்டு விளக்கேற்றினார்.