Jackie Chan movie released on KABALI released day

0

Jackie Chan movie released on KABALI released day

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கபாலி ரிலீஸ் அன்று வெளியான   

                                           ஜாக்கிசான் படம்

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப் படுகிறவர் ஜாக்கிசான். ஆனால் நான்கு ஆண்டுகளாக மிகப்பெரிய வெற்றியை எதிர்கொள்ளாமல் இருந்தார்.

ஆனால் கபாலி வெளியான அதே தேதியில் ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் ( SKIP TRACE ) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே.

இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் வின்ஸ்டன் சாவ மிகப்பெரிய ஜாக்பார்ட்.. இருக்காதா பின்ன.. இவர்தானே கபாலியின் மெயின் வில்லன்ஒரே நாளில் ஜாக்கிசான், ரஜினி படங்களின் மூலம் உலகப் பிரசித்தம் அடைந்து விட்டார்.

மற்ற நட்சத்திரங்கள் பிங் பிங் பென், ஜானி கினாக்ஸ்வில்லே. இயக்கி இருப்பவர் DIE  HARD, கிளிப் ஆங்கர் போன்ற சாதனைப் படங்களை இயக்கிய ரென்னி ஹார்லின் என்பதும் வசூல் சாதனை எகிற ஒரு காரணம்.

சீனாவை தவிர உலகமுழுவதும் இந்திய மற்றும் அமெரிக்காவில் செப்டம்பர் 2 ம் தேதி வெளியாகிறது.

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE படம் தமிழில் “ இரு கில்லாடிகள் “ என்ற பெயரில் வெளியாகிறது.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆகிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர்    SKIP TRACE             ( இரு கில்லாடிகள் )  “ படத்தை செப்டம்பர் 2 ம் தேதி வெளியிடுகிறார்.

300 தியேட்டர்களுக்கு மேல் வெளியிட திட்டமிட்டுள்ளார் விஸ்வாஸ் சுந்தர்.

Share.

Comments are closed.