Kaadhale Vendam Saamy Press Release

0

Kaadhale Vendam Saamy Press Release

Kaadhale Vendam Saamy Press Release

Kaadhale Vendam Saamy Press Release

 

 

 

ஃபோர்டியூன் ஸ்டூடியோ தயாரிப்பில்

"காதலே வேண்டாம் சாமி "

ஃபோர்டியூன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் சபீர் சுலைமான் ராவுத்தர் தயாரிப்பில்

"காதலே வேண்டாம் சாமி "என்ற புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில்

உள்ளது .

இப்படத்தின் கதாநாயகனாக "அபிஷ் "அறிமுகமாகிறார் .கதாநாயகியாக மவுமிதா

சௌத்ரி , வில்லனாக ரபிக் மற்றும் குணச்சித்திர வேடங்களில் செல்லா ,நிறைமதி மற்றும்

பலர் நடிக்கின்றனர் .இப்படத்தின் கதை -திரைக்கதை –வசனம்  எழுதி  இயக்கியுள்ளார்

புதுமுக இயக்குனர் யாசர் .

சமூக வலைத்தளங்களில் ஏற்படும் அவலநிலையை தட்டி கேட்கும் ஒரு சட்டக்கல்லூரி

மாணவனை மையமாக வைத்து உருவாகும் கதை இது .சட்டக்கல்லூரியில் படிக்கும்

சகமாணவன் ஒருவன் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியின் புகைப்படத்தை

ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறான் .தட்டிக்கேட்கும்

கதாநாயகன் அவனுக்கு கல்லூரி மைதானத்தில் பெரிய தண்டனை தருகிறான் .

வில்லன் அரசியல் பலம் ,பணபலதை பயன்படுத்தி கதாநாயகனை பெரிய சிக்கலில்

மாட்டிவிடுகிறான் .கதாநாயகன் அதிலிருந்து மீண்டுவந்தானா ? என்பது கதை .

சமூகத்தில் தற்போது நடக்கும் அவலங்களை பிரதிபலிக்கும் விதமாக திருநங்கைகள்

மூலம் பாடும் ஒரு பாடல் காட்சியாக்கப்பட்டுள்ளது .சமூக வலைத்தளங்கள் மூலம்

நடக்கும் குற்றங்களை  அப்பட்டமாக படமாக்கப்பட்டுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் , பூம்பாறை ,அரியலூர் ,சிதம்பரம் ,மற்றும்

சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடைப்பெற்றது .படத்தில் மொத்தம் நான்கு

பாடல்களும் ,மூன்று சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன .

இப்படத்தில் பாடல்கள் பாரதி கண்ணதாசனால் இயற்றப்பட்டு இசையமைப்பாளர்

"மேஸ்வெல் புஜி" யால் இசையமைக்கப்பட்டுள்ளது .

தொழில் நுட்பக் கலைஞர்கள்

எழுத்து – இயக்கம்  : யாசர்

ஒளிப்பதிவு : சிவா.R

இசை : மேக்ஸ்வெல் புஜி

பாடல்கள் : பாரதி கண்ணதாசன்

எடிட்டிங் : தேவா

நடனம் : பம்மல் சந்துரு

ஆக்க்ஷன் : ஹமீது

மக்கள் தொடர்பு : செல்வரகு

தயாரிப்பாளர்   : சபீர் சுலைமான் ராவுத்தர்

kvv1 kvv2 kvv3

Share.

Comments are closed.