Adharva joins 4 heroins for AMMA CREATIONS, T.Siva’s film.
T.சிவா – வின் அம்மா கிரியேஷன் தயாரிக்கும் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தில் நான்கு கதாநாயகிகள்
“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்”
T.சிவா – வின் அம்மா கிரியேஷன் தயாரிக்கும் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தில் நான்கு கதாநாயகிகள் !!
அம்மா கிரியேஷன்-ன் வெள்ளி விழா ஆண்டான 25-ஆம் வருடத்தில் T.சிவா – வின் மிக பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வரும் திரைப்படம்
“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” இதில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரெஜினா கசன்ட்ரா , ப்ரணீதா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ஆனந்தி நடிக்கிறார்கள்.இவர்களுடன் சூரி , நான் கடவுள் ராஜேந்திரன் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மேலும் மயில்சாமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு
happy wheels style="color: #222222;">இசை : டி.இமான், பாடல்கள் : யுகபாரதி, படத்தொகுப்பு : பிரவீன் K.L, கலை இயக்குனர் : வைரபாலன், ஒளிப்பதிவு : ஸ்ரீ சரவணன், இப்படத்திற்கு
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் : ஓடம்.இளவரசு.
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது “காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் பெண்களின் முதல் காதல் அவர்களின் வாழ்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தற்போதுநடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” இத்திரைப்படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா உடன் 2MB நிறுவனம் சார்பாக ரகுநாதன்.P.S, R.சந்திரசேகர் மற்றும் R.சரவண குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.
“BIG PRINT PICTURES” சார்பாக I.B.கார்த்திகேயன், திலிபன் செங்கோட்டையன்,
D.பரஞ்சோதி ஆகியோர் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்கள்.
இத்திரைப்படம் இந்த வருடத்தில் டிசம்பர் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.
