Home / Breaking news / Ajith’s ” Vivegam ” Press Release

Ajith’s ” Vivegam ” Press Release

Ajith’s ” Vivegam ” Press Release

 

 

 

 

Ajith’s ” Vivegam ” Press Release

press release pertaining to “Vivegam”

Editing can often make or break a film. Anymovie with a good, well presented, sleek editing is always well received by the audience. Editing become even more vital in a high budgeted action feast like ‘Vivegam’. Editor Ruben who is one of the top most editors in the industry with his innovative and fresh cuts has handled the massive responsibility of editing ‘Vivegam’ starring Ajith Kumar, Kajal Agarwal, Vivek Oberai and Akshara Hassan. This highly anticipated movie is directed by Siva, produced by Sathya Jyothi films, music is done by Anirudh and the cinematography is done by Vetri. VIVEGAM is all set for a monstrous release world wide on August 24th. Speaking about ‘Vivegam’ editor Ruben says, ” ‘Vivegam’ is truely an international spy film with all the goosebump moments. Ajith sir’s screen presence is like a massive thunder. He has done a mind blowing job in VIVEGAM. The stunt sequences he has done are just jaw dropping and unbelievable. The visuals of ‘thalai viduthalai’ song will have ten times more theatre moments than ‘Aaluma doluma’. The whole movie is going to be a mighty treat for the fans and the audience. My chemistry with director Siva sir is so good that i enjoy working with him. The belief he has in me makes me go the extra mile. Since he knows editing very well i love working with him. The husband -wife love portions have come out very well in this action extravaganza. I am sure VIVEGAM is going to be a royal feast to the audience and I am so eagerly to watch it with the fans and audience on August 24th ”
 
⁠⁠⁠⁠⁠ஒரு திரைப்படத்தை ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி வாய்ந்தது அதன் படத்தொகுப்பு. திறமையாக , நேர்த்தியாக படத்தொகுப்பு செய்யப்பட்ட எந்த ஒரு படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி கண்டுள்ளது. பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமான ‘விவேகம்’ போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில்  படத்தொகுப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தனது புதுமையான விறுவிறுப்பான ‘கட்’ களால் தமிழ் சினிமாவின் முக்கிய படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன், அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்து, சிவா இயக்கத்தில் , சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் , வெற்றியின் ஒளிப்பதிவில் உருவாகி , ஆகஸ்ட் 24 ஆம் தேதி உலகம் முழுவது பிரம்மாண்டமாய் ரிலீஸாகவுள்ள ‘விவேகம்’ படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
இது குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில், ”’விவேகம்’,படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம். திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன். அவ்வளவு சிறப்பாக அவர் செய்துள்ளார்.அவர் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வகையில் இருக்கின்றது. இப்படத்தின்  ‘தலை விடுதலை’ பாட்டின் காட்சியமைப்பு ‘ஆலுமா டோலுமா’ பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித் சாரின் ரசிகர்களுக்கும் , பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் ‘விவேகம்’ ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும். இயக்குனர் சிவா சாருடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பனியை  மேலும் திறம்பட செய்யமுடிகிறது. அவர் என் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் உழைக்க தூண்டுதலாக இருக்கின்றது. இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ‘விவேகம்’ ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆகஸ்ட் 24 அன்று திரை அரங்குகளில் ரசிகர்கள் வெள்ளத்தோடு ‘விவேகம் ‘ படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்” என்கிறார் ரூபன்.
 

About admin

Check Also

Dr. Agarwal’s Eye Hospital organises a three-day educational workshop

Dr. Agarwal’s Eye Hospital organises a three-day educational workshop for ophthalmology students from all over …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *