” Hara Hara Mahadevaki ” release 2day 29/9/17 ( Movie Review )

0

Hara Hara Mahadevaki release 2day 29/9/17

 

Hara Hara Mahadevaki release 2day 29/9/17

காதலர்களான கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ரானி சிறு ஊடல் ஏற்பட்டு பிரிய நினைக்க அதற்காக வாங்கி கொடுத்த பொருட்களை திருப்பித்தர இருவரும் சம்மதிக்கிறார்கள். கௌதம் கார்த்திக் அனைத்து பொருட்களையும் அரசியல்கட்சி பேக்கில் வைத்து எடுத்து வருகிறார்.

அதே சமயம் அரசியல்வாதி ரவிமரியா தேர்தலில் ஜெயிப்பதற்காக தன் கட்சி கூட்டத்திலேயே பாம் வெடிக்க ஏற்பாடு செய்யுமாறு நமோ நாராயணனிடம் கூறுகிறார்.இதற்காக கருணாகரன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனிடம் அரசியல் கட்சி பேக்கில் பாமை வைத்து காரியத்தை கச்சிதமாக முடிக்குமாறு நமோ நாராயணன் அனுப்புகிறார்.

கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றினால் கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் பாலசரவணன் இரண்டு லட்சத்தை அரசியல் கட்சி பேக்கில் வைத்து மாற்றுவதற்காக எடுத்து வரும் போது தொலைந்து விட பேக்கை தேடி அலைகிறார்.

ஹரஹரமஹாதேவகி என்ற விடுதியில் வந்து தங்கும் பணக்கார தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்படுகிறது. போலீசை நாடாமல் ஒரு கோடி பணத்தை ஒப்படைத்தால் குழந்தையை ஒப்படைப்போம் என்று கடத்தல் பேர்வழி மிரட்டல் விடுக்கிறார். அதனால் கேட்ட பணத்தை அரசியல் கட்சி பேக்கில் சொன்ன இடத்தில் வைத்து விட்டு வந்து விடுகின்றனர்.

சம்பந்தமில்லாத இந்த நான்கு சம்பவங்களும் ஹரஹரமஹாதேவகி என்ற விடுதியில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.அனைவரின் பொருளும், பணமும் இருக்கும் அரசியல் கட்சி பேக் ஒவ்வொரிடமும் கைமாறி செல்ல இறுதியில் யார் கைக்கு பணம் கிடைத்தது? உண்மையான பாம் வெடித்ததா? அரசியல்வாதி எண்ணம் பலித்ததா? கடத்தல் பேர்வழியிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டதா? இறுதியில் என்ன ஆனது என்பதே காமெடி கலந்த நிறைவான க்ளைமேக்ஸ்.

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி, ரவிமரியா, நமோ நாராயணன், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், லிங்கா ஆகியோர் படத்தின் டவுள் மீனிங் காமெடிக்கு உத்தரவாதம்.

பாலமுரளிபாலு இசையில் பாடல்கள்அனைத்தும் கேட்கும்படி உள்ளது.

செல்வகுமார் எஸ்.கேயின் ஒளிப்பதிவு நகைச்சுவை காட்சிகளுக்கேற்ற பதிவை சிறப்பாக தந்திருக்கிறார்.

எழுத்து, இயக்கம்- சந்தோஷ்.பி.ஜெயகுமார். ஏற்கனவே வந்து அனைத்து படங்களின் கலவையாக காமெடி காட்சிகளையமைத்து பேக்கை சுற்றியே அனைவரும் ஒட வைத்து, இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்து இருக்கிறாரே தவிர காட்சிகள் எல்லாம் விரசமாக காட்டாமல் அனைவரும் ரசிக்கும்படியாகவும், விறுவிறுப்பாகவும் தோய்வு இல்லாமல் இயக்கியிருக்கிறார் சந்தோஷ்.பி. ஜெயக்குமார்.

மொத்தத்தில் ஹரஹரமஹாதேவகி இளைஞர்களை குறிவைத்திருக்கும் ஜாலியான படம்.

மொத்தத்தில் ஹரஹரமஹாதேவகி காமெடி

 

Share.

Comments are closed.