Libra Short Film Festival on Nov -19.

0
 Libra Short Film Festival on Nov -19.

நவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..!

லிப்ரா குறும்பட போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள் பட்டியல்! 

நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள்

  1. Gangs of 47
  2. Koorpi
  3. Karmachakram
  4. All ilatha Roobam
  5. Mutham
  6. The Ring
  7. The Affair
  8. Vanam
  9. Thirantha Puthagam
  10. Kadan
  11. Naan 8
  12. Savadaal
  13. Nil
  14. Thamizhachi
  15. Theerathu
  16. Yeman
  17. Rays of hope
  18. kannuku iniyal
  19. Pitchai Pathiram
  20. Madharassi
  21. Jillunu oru kalavaram
  22. L Board
  23. Tiffen Box
  24. Koorvazh
  25. Ippadiku Vivasayee
  26. Abaya
  27. Kuva Kuva
  28. Pen Paal
  29. Thalai Vanankathe thamizha
  30. Back Bone
  31. kaliyugam
  32. Salt
  33. Pagal Natchathiram
  34. Mayakkanadi
  35. Iruthi Aram
  36. Manidham Enge
  37. Ninaivugal
  38. In the Orb of Night
  39. 93* not out
  40. Solomon My Father
  41. Kalavu
  42. Giant Wheel
  43. Loyalty
  44. 18 Sticks
  45. Vacha kuri Thappadhu
  46. Kayal
  47. Kavarimaan
  48. Chilra Illa Papa
  49. Adiye Azhage
  50. Enga Vettu Pillai
  51. Vidiyattum eni
  52. Yatchi
  53. Ippadiku Police

இந்த 53 குறும்படங்களையும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் கொண்ட குழு பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.. மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை,   இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,  படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என இந்த 53 குறும்படங்களில் இருந்தே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்..

இந்த விருது வழங்கும் விழா வரும் நவ-19ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், முதல் பத்து பரிசுகளுக்கு தகுதியான குறும்படங்கள் பற்றிய விபரங்கள் அன்றைய தினம் விழா மேடையில் வைத்து அறிவிக்கப்படும்.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த விழாவை தொடர்ந்து நடத்துவது குறித்து லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர சந்திரசேகரன் கூறுகையில், “குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல.. இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது.. அதேசமயம் பணம், லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம்..

என்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது.. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும்.. நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல.. வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும்.. இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்கிறார் தெள்ளத்தெளிவாக.

Share.

Comments are closed.