G.V.Prakash kumar sings a song in Bala’s NAACHIYAR.

0

G.V.Prakash kumar sings a song in Bala’s NAACHIYAR.

 

நாச்சியார்” படத்திற்காகமனதை வருடும் பாடலைபாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார் 

பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராகஅனைவரின் மனதையும் கவர்ந்தவர்ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரது மெய்சிலிர்க்கும்குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றிபெற்றுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய “மெர்சல்அரசன்” பாடல் ரசிகர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.

தற்போது அவரே மெய்சிலிர்த்துப் போன ஒருபாடலை இயக்குநர் பாலா இயக்கத்தில்உருவாகும் “நாச்சியார்” படித்திற்காகபாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின்இசையில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன்எழுதிய வரிகளில் ” ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து” என்று தொடங்கும்பாடலைத் தனியார் தொலைக்காட்சியில்ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்மூலம் புகழடைந்த பாடகி பிரயங்காவுடன்இணைந்து பாடியுள்ளார். மேலும் இப்பாடல்அனைவரது மனதை வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும்என்றும் கூறியுள்ளார்.

ஜோதிகா ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்துநடிக்கும் “நாச்சியார்” படத்தை பி ஸ்டுடியோஸ், EON ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு – ஈஸ்வர், படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை – C.S.பாலசந்தர்.

 

 

பாடகி பிரியங்காவின்கனவை நிறைவேற்றியஇசைஞானி இளையராஜா 

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும்அனைவருக்கும் ஒரு தீராத ஆசை இருக்கும்,அது இசைஞானி இளையராஜாவின்இசையில் ஒரு பாடலையாவது பாடிவிடவேண்டும் என்பதே.

தனது இனிமையான குரலால் அனைவரையும்வசிகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்க்கும்இந்தக் கனவு பல நாட்களாக இருந்துவந்தது.

தற்போது இவரது பல நாள் கனவுநினைவாகியுள்ளது, இசைஞானிஇளையராஜாவின் இசையில் இயக்குநர்பாலா இயக்கத்தில் Dr.தமிழச்சிதங்கபாண்டியன் எழுதிய வரிகளில் உருவான”நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில்நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்துபாடியுள்ளார்.

பிரயங்காவின் நீண்ட நாள் ஆசைநிறைவேறியதால் மிகுந்த சந்தோஷத்தோடுஉள்ளார்.

Thanks & Regards,

Nikkil & Team

Share.

Leave A Reply