Kamal speach @ the trailer launch of ” Viswarupoom 2 “

0

Kamalhaasan speach at Trailer Launch of ” Viswaroopam 2″

விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் போல, இரண்டாம் பாகத்திற்கும் பிரச்னை வந்தால் சந்திக்க தயார்,” என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் கூறினார்.
கமல் நடித்து இயக்கிய, விஸ்வரூபம் – 2 படத்தின், ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில், நேற்று நடந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, மூன்று மொழி டிரைலர்கள் வெளியிடப்பட்டன.

கமல் பேசியதாவது: ‘விஸ்வரூபம்’ முதல் பாகம் படத்தின் தாமதத்திற்கு, என்ன காரணம் என, அனைவருக்கும் தெரியும். கிட்டதட்ட அதே காரணங்கள், ‘விஸ்வரூபம் -2’க்கும் தொடர்ந்தன. ஆனால், வைரமுத்து எழுதித்தந்த, ‘தடைகளை வென்றேன்’ என்ற பாடல் போல, படம் தடைகளை வென்று வருகிறது. ‘ஹாலிவுட்’ படத்திற்கு நிகரான பிரின்ட்களுடன், ஆகஸ்ட், 10ல், உலகம் முழுக்க வெளியாகிறது.

தமிழ் படங்கள், உலகமெங்கும் பார்க்கும் விதமாக மாற வேண்டும். முதல் பாகத்திற்கு வந்தது போன்ற தடை, இந்த படத்திற்கு வராது. அரசியல் ரீதியான எதிர்ப்பு வந்தால், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள, நான் தயாராக இருக்கிறேன். எனக்கு சினிமா வேறு; அரசியல் வேறு. முதல் பாகத்தை வெளியிடுவதற்கு, சிலருக்கு திரையிட்டு காட்டும்படி வற்புறுத்தப்பட்டேன். இந்த படத்திற்கு, அந்த மாதிரி வற்புறுத்தல் இருக்காது. இந்தப் படத்தில், வீண் பேச்சு இருக்காது. ‘ஆக் ஷன்’ இருக்கும்; உணர்வுகள் இருக்கும். இவ்வாறு கமல் பேசினார.

Share.

Leave A Reply