Upcoming Film ” Duryodhana “

0

Upcoming Film ” Duryodhana “.

 

பூர்ணா பிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் 
“துரியோதனா”
 
திரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரு மாஸ் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த “இருப்புத்திரை”, “தனிஒருவன்”” வசூலில் சக்கை போடு போட்டது. அந்த வகையில் புதியவர்களின் முயற்சியாக “துரியோதனா”. 
 
உடல் உறுப்புகளை கடத்தும் கும்பலால்   ஹீரோயின் படத்தின் தொடக்க காட்சியில் கடத்தப்படுகிறார். அதை கண்டு பிடிக்கும் சீக்ரெட் இண்பர்மேஷன் ஆபிசர் டெல்லியில் இருந்து கேரளா வருகிறார். கதை தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை வந்த திரில்லர் படங்களில் இந்தப்படம் வேறு கோணத்தில் இருக்கும் என கூறுகிறார் இயக்குனர் பிரதோஷ். 
 
மும்பை, டெல்லி, ராமேஸ்வரம், கேரளாவின் அடர்த்தியான காடுகளில் “துரியோதனா” திரைப்படம் படமாக்கப்பட்டது. 
 
கதாநாயகனாக பிரதோஷ், வினுராகவ் நடிக்கிறார்கள். சின்னத்திரையில் புகழ்பெற்ற நவ்யாசாமி கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ஷில்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
ஒளிப்பதிவு: ஹரீஷ் அப்துல்லா, மகேஷ் ராம்.
எடிட்டிங்: விமல் 
வசனம்: தனசேகரன் 
இசை: C.S.குமார் 
பாடல்கள்: ஸ்ரீதர், பிரதோஷ் 
கதை, திரைக்கதை, இயக்கம் பிரதோஷ் 
 
தமிழகம் முழுவதும் “ஆக்ஷன் ரியாக்ஷன்” நிறுவனம் மூலம் ஜெனீஷ் வீரபாண்டியன் வெளியிடுகிறார்.

 

 
Share.

Comments are closed.