Actor Sasikumar & Vijayasethupathy speach

0

Actor Sasikumar & Vijayasethupathy speach @ audio launch of Petta.

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பேசியது:

ஹய்யோ.. ரஜினி சாரோட படத்தையெல்லாம் முதல் நாள், முதல் ஷோ பார்த்த அவரோட ரசிகன் நான். அவரை அண்ணாந்து பார்த்தவன். அவ்ளோ உயரத்துல இருக்கற சூப்பர் ஸ்டாரோட நானும் நடிச்சிருக்கேன்னு நினைக்கும் போதே பெருமையா இருக்கு.

ரஜினி சார், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ் எல்லாருக்கும் நன்றி. படம் நினைச்சதை விட சீக்கிரமே முடிஞ்சிருச்சு. ரஜினி சாரை பாத்துக்கிட்டே இருக்கலாம். அவரைப் பாக்கப் பாக்க ஒரு எனர்ஜி வந்துரும் நமக்கு. இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாமேனு தோணுச்சு.

ரஜினி சார், ரொம்ப தோழமையா பழகினார். ரொம்ப ரொம்ப எளிமையா, சாதாரணமா பழகினார். அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார், கேரவனுக்குள்ளே போய் ரெஸ்ட் எடுக்காம, டிரஸ் மாத்தக்கூட போகாம, அவ்ளோ எளிமையா, சகஜமா இருந்தார். ஆச்சரியமா இருந்துச்சு.

எனக்கு டான்ஸ் வராதுன்னு ரஜினி சார் சொன்னார். ஆனா அது உண்மையில்ல. அவ்ளோ ஸ்டைலா ஆடினார். 4 மணிக்கு ஷூட்டிங். ரெண்டரைக்கே வந்துட்டாரு. இத்தனைக்கும் மலைல அந்தப் பாட்டு ஷூட்டிங் நடந்துச்சு. கொஞ்சம் கூட முகம் சுளிக்காம ஆடிட்டுப் போனார் ரஜினி சார்.

அதுமட்டுமில்ல. அவரோட பழைய கதைகளையெல்லாம் சொன்னப்ப பிரமிப்பா இருந்துச்சு. சும்மா இந்த உயரத்துக்கு வந்துடலை. வரவும் முடியாது. அவ்ளோ உழைப்பு. ஈடுபாடு. அது happy wheels இருந்ததாலதான் அவர் இன்னிக்கி சூப்பர் ஸ்டாரா இருக்கார்.

உண்மைய சொல்லணும்னா, ரஜினி சாரோட ஸ்டைலான ஆட்டத்தைப் பாத்துதான், நாங்க அதை பாலோ பண்ணி, ஆடிட்டிருக்கோம்.

பேட்ட அருமையா வந்திருக்கு. பிரமாதமா எல்லாரும் ரசிக்கும்படி அமைஞ்சிருக்கு. ஒரு ரசிகர் ரசிச்சு ரசிச்சு படம் எடுத்தா எப்படியிருக்கும்? கார்த்திக் சுப்பராஜ் அப்படித்தான் எடுத்திருக்கார்.

ரஜினி சாருக்கு ஒரேயொரு வேண்டுகோள். ரஜினி சார்… நீங்க நிறைய படங்கள் நடிச்சிக்கிட்டே இருக்கணும் சார். அமிதாப் மாதிரி தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

Vijaysethupathy speach on audio launch of Petta.

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது,

நாம எல்லாரும் கனவு காணுறது வழக்கமதான், ஆனா நான் காணாத ஒரு கனவு நடந்தது, அதுதான் ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதுல இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். இந்த படத்துலயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கு.

எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான்.

ஆங்.. மறுபடியும் ஜானுவ இங்கே பார்க்கிறேன்

Share.

Comments are closed.