Parthiban upcoming film ” Otha Seruppu Size 7 “

0

Radhakrishna Parthiban’ s upcoming film ” Otha Seruppu Size 7 ”  

 

 

‘வழக்கமான’ ‘வித்தியாசமான’-இப்படி எதிர்மறையான’ இரு வார்த்தைகளை இணைத்தே… என் படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு நான் எதிர்பாராமலே ஏற்பட்டு விடுகிறது. அதை ஈடு செய்யும் விதமாக நானும் கடுமையாக உழைத்து copy அடிக்காமல் சிந்தித்து இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக… புத்தம் புதிய அணுகுமுறையிலான திரைக்கதையே ‘ஒத்த செருப்பு size-7’
ஒத்த செருப்பின், ஒத்த சிறப்பு, மெத்தவும் பாராட்டும்படியாகவும் இருக்கும் அதை தவிர, மத்த செய்திகள்… அதாவது இந்த ஒத்த செருப்பின் ஜோடி செருப்பு எது? எங்கே? யார்? ஏன் size-7, வேற என்னென்ன சிறப்பு அம்சங்கள்? இவை அனைத்தையும் சொல்லும் தருணம் விரைவில் வரும்.
இது ஒரு குறுகிய கால தயாரிப்பு.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஓட்டு வாங்கிவிட வேண்டும் என்று சுய கௌரவத்தை விட்டுக் கொடுத்தும், மானம் மரியாதைக்கு விடுமுறை கொடுத்தும் கூட்டணி அமைப்பதைப் போல் இல்லாமல், இப்படத்தில் நான் அமைத்திருக்கும் கூட்டணியால் வெற்றி வாய்ப்பு உறுதியாகிறது.
நான் நேசிக்கும் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன்- உடன் இணையும் முதல் படம்.
ஒத்த பாட்டில் மொத்த கதையையும் அதில் காதலையும், சோகத்தையும்’ கருப்பு வெள்ளை கட்டைகளாக வாசித்து பிரம்மிக்க வைத்திருக்கிறார்.
வெறும் 39 வினாடிகளே ஓடும் ( இப்படி என் அன்பினால் அடைப்புகுறிக்குள் அடைக்கபட்ட நண்பர் விஜய் சேதுபதி அருளிய) முதல் பார்வையில் ஏதோ சில விசேஷ விஷயங்கள் இருந்தே தீரும் என்று ரசிகர்கள் நம்புவதற்கு உயிர்ப்பான சந்தோஷ். N-னின் இசைவே காரணம்.
ஒளிப்பதிவில் உச்சம் தொட்ட திரு.இராம்ஜியுடன் நான் இணையும்… முதல் படம். ‘பாகுபலி’யின் வெற்றிக்கு பின்னும் ‘ஆயிரத்தில் ஒருவனின்’ பெருமையை சொல்லும் சூத்திரதாரிகளின் முக்கியமானவரான, ராம்ஜியின் திறமைக்கு சாவலான இன்னொரு படம் இது. KTVI-ன் வெற்றியில் edit செய்ய முடியாத ‘editor’ சுதர்சனின் பங்களிப்பு இதில் உண்டு, அயாரத உழைபாளி அமரனின் கலையும், விஷ்ணுவின் நிழல் படங்களும், அப்துலின் ஒப்பனையும், மக்கள் தொடர்பளாராக சுரேஷ் சந்திராவும், கண்ணதாசனின் designகளும் இப்படி design design-னாக பல இப்படத்தின் தொழில்நுட்பத்தை துல்லியமாக்க.
‘ஆத்தா’ நான் உண்டாயிட்டேன் என பிரசவ-பரவசம் அடையும் அளவுக்கு துவக்கத்திலேயே எற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பில், கூடுதலாக இருக்கும் படபடபோடு படப்பிடிப்பை முடித்து விட்டு உங்களை இன்முகத்தோடு இனிதே சந்திக்கிறேன்.
பிரியமுடன்,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

 

 

Share.

Leave A Reply