Director S.P.Jananadhan’s Film title “Laabham “

0

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் லாபம்.

தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள்  அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன.  படத்தின் பெயர் லாபம்.
  இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அவர் லாபம் படத்தில் நடிக்க இருப்பதே முதல் லாபம். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெறும் படங்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல பதிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதிஹாசன். அப்படியான படமாக அவருக்கு லாபம் அமைந்துள்ளது. லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதி உடன் ஜோடி சேர்கிறார்.  இவர்களோடு ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அறமும் அரசியலும் பேசிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன்   லாபம் படத்தை இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதிரடி ஆக்‌ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இப்படம் விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பது படக்குழு சொல்லும் உறுதிமொழி.முக்கியமான நட்சத்திரங்கள், தடம் பதித்த இயக்குநர் என இந்தக் கூட்டணியே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கையில், தரமான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்வதை வாடிக்கையாக அல்ல வாழ்க்கையாக கொண்ட, பருத்திவீரன், இரண்டாம் உலகம் , தனி ஒருவன் ஆகிய படங்களில் ஒளிப்பதிவில் தனித்துவத்தை நிறுவிய ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் லாபத்தில் இணைந்து படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறார். எளிய மக்கள் உட்பட எல்லா மக்களும் ‘கண்ணான கண்ணே’ என கொஞ்சும் இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்தில்  இசை அமைப்பாளராக பங்கெடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. முழுக்க முழுக்க பாஸிட்டிவிட்டிவ்ஸ் நிறைந்த இப்படம் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறதுIn a first, Shruti Haasan teams up with Vijay Sethupathi in director S P Jananathan’s Laabam!Very rarely does a film emerge as a trend setter in Tamil cinema. Such trend setters create not just social awareness but also an awakening in society. The moments that lead to the making of such films are all invariably and undeniably great moments. Now, one such great moment has occurred.Yes, actor Vijay Sethupathi’s production house, Vijay Sethupathi Productions, which has made critically acclaimed films like Orange Mittai, Junga and Merkku Thodarchi Malai, in association with 7 C S Entertainment, a firm that has made movies like Naalu Policeum Nalla Irundha Oorum and Oru Nalla Naal Paarthu Solren, is in the process of making an exciting and impressive new film titled Laabam.Vijay Sethupathi, who has an outstanding track record not only when it comes to making films that succeed at the box office but also providing quality entertainers that fans and film buffs love, will play the lead in this film. Shruti Haasan, who firmly believes that her films must not only be good entertainers that are commercially successful but also be made in such a fashion that they leave their indelible mark on society and be known for their quality, will play the female lead.Interestingly, this is the first time that Shruti Haasan will be pairing up with Vijay Sethupathi for a film.Apart from this exciting lead pair, the film will also feature well known actor Jagapathi Babu in a prominent role. National Award winning director S P Jananathan, who is known for making good entertaining films that also seek to highlight political and social justice issues like Peraanmai, Ee and Purampokku, will be directing Laabam. Work on the first schedule of this big budget film got underway today with a pooja at Rajapalayam. Sources close to the unit of the film vouch that the action entertainer with a solid story line will be an important film in the careers of both Vijay Sethupathi and Shruti Haasan.Already, the film has created a buzz in the industry and huge expectations are riding on it. To add to this excitement, the team has roped in one of the finest cinematographers in the industry, Ramji, as its cameraman. Ramji is known for his work in several critically acclaimed films like Paruthi Veeran, Thani Oruvan and Irandam Ulagam.D Imman, who is known for his heart melting mellifluous melodies, will be the music director of this film. Imman, who has a penchant for scoring melodies, especially folk numbers that can win the hearts of everybody including the common man, will be one of the biggest strengths of this film.With all the factors associated with the film proving to be positive, the vibes being sent out from the unit also seem to be extremely positive.

Share.

Leave A Reply