Director Lakshmi Ramakrishna’s ” House Owner ” Movie Review

0

Director Lakshmi Ramakrishna’s ” House Owner ” Movie Review.

The movie is based on floods in Chennai on 2015 with real mixed creative, Director handled with little star caste and made a beautiful movie with sweet dreams of Hero’s past who have memory lose with some incident in mind, Sriranjani acted well and lived in the character with Kishore . The Pasanga Kishore and lovelyn also gives support to the pastence Kishore and Sivaranjani., Art and Camera & Music were superb.. 

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள ஹவுஸ் ஒனர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஒய்வு பெற்ற கர்னல் ஆடுகளம் கிஷோர் அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி ராணுவ குடியிருப்பில் வசிக்கின்றனர். அல்சைமர் என்ற மறதி நோயால் அவதிப்படும் கிஷோரை அன்போடு கவனித்து கொள்கிறார் ஸ்ரீரஞ்சனி. 2015ல் மழை மற்றும் பெருவெள்ளத்தால் அந்த காலனி பாதிப்புக்குள்ளாக, கிஷோர் அந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்க வேறு வழியில்லாமல் கிஷோரை வைத்து சமாளிக்க முடியாமல் தவிக்கிறார் ஸ்ரீரஞ்சனி. வீட்டினுள் தண்ணீர் புகுந்து விட இருவரும் இறுதியில் தப்பித்தார்களா? தண்ணீரில் மூழ்கினார்களா? என்பதே பதைபதைக்கும் க்ளைமேக்ஸ்.

கர்னல் வாசுதேவனாக ஆடுகளம் கிஷோர் மறதி நோயால் இளவயது தோற்றத்தையும், இளவயது மனைவியின் ஞாபகத்தையும் மட்டுமே நினைவில் இருக்க வயது முதிர்ந்த மனைவி ஸ்ரீரஞ்சனியை உதாசினப்படுத்தி, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து பழைய நினைவுகளில் முழ்கிடும் கதாபாத்திரத்தில் மிளரிகிறார். இளவயது தோற்றத்தில் வரும் பசங்க கிஷோரின் நடிப்பும் சிறப்பு.

வயதான மனைவி ராதாவாக ஸ்ரீரஞ்சனி நோயால் பாதிக்கப்பட்ட கணவரின் பரிவும் அன்பும் கிடைக்காவிட்டாலும், அனுசரித்து அரவணைத்து பாதுகாப்பாக வழிநடத்தி ஒவ்வொரு சூழ்நிலையிலும் காப்பாற்றினாலும், இறுதியில் தண்ணீரில் தத்தளித்து வேறு வழி தெரியாமல் தவிக்கும் தவிப்பு அற்புதம். இயல்பான யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். இளவயது ராதாவாக லவ்லின் சந்திரசேகர் சிறப்பான தேர்வு.

சேத்தன், கவிதாலாயா கிருஷ்ணன் மற்றும் பலரின் நடிப்பு கச்சிதம்.
ஜிப்ரானின் இசையும், கிருஷ்ணா சேகரின் ஒளிப்பதிவும் பாலக்காட்டு பிராமணர்களின் சம்பிரதாயங்களையும், சென்னையில் வீட்டிற்குள்; நடக்கும் சம்பவங்களை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு மழையின் தாக்கத்தையும், சீற்றத்தையும் நிஜமாக உணர வைக்கிறார். பிரேமின் படத்தொகுப்பு விறுவிறுப்பை அள்ளித்தருகிறது.

இயக்கம்-லட்சுமி ராமகிருஷ்ணன். 21015ல் நடந்த சில நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அதில் பாலக்காட்டு தமிழின் கலவையோடு வயதான தம்பதிகளின் உண்மையான அன்பையும், தவிப்பையும் பிரதிலிப்பதோடு, படத்தில் அந்த தோழமை உணர்வை உணரச் செய்து கடைசி இருபது நிமிடங்களை படபடக்க வைத்து, தண்ணீரில் மூழ்கும் காட்சிகளில் அசர வைத்திருக்கும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் அரிய முயற்சியை பாராட்டலாம்.

மொத்தத்தில் ஹவுஸ் ஒனர் அனைவரின் மனதிலும் ஹவுல் ஃபுல்;;லாக என்றுமே நிறைந்திருக்கும்.

Share.

Leave A Reply