” G.V.” Movie Review

0

” G.V.” Movie Review.

 

G>V.movie is a different story and the movie can watch with family, A good screenplay, and dialogue is superb. All the Artist are well acted. Rating for  G.V. is 4/5

 

ஊரில் வேலையில்லாமல் சுற்றித்திரியும் வெற்றி சென்னைக்கு வருகிறார். சின்ன சின்ன வேலைகளை செய்து பின்னர் ஜூஸ் கடையில் வேலையில் சேர கருணாகரனுடன் நண்பராகிறார். எதிர் கடையில் வேலை செய்யும் மோனிகாவை வெற்றி காதலிக்க, வசதியின்மையை காரணம் காட்டி மோனிகா சென்று விடுகிறார். இதனால் விரக்தி அடையும் வெற்றிக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அவரது அக்கா வீட்டை விட்டு ஒடி விட, அதனால் தந்தை நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். பணத்தேவைக்காக சென்னையி;ல் வீட்டு உரிமையாளரான ரோகிணியின் நகைகளை திருட திட்டம் போடுகிறார் வெற்றி. இதில் அவர் போட்ட திட்டம் நிறைவேறியதா? அக்காவை கண்டுபிடித்தாரா? தந்தையை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

வெற்றி, மோனிகா சின்னகோட்லா, அஸ்வினி சந்திரசேகர், கருணாகரன், ரோகிணி, ரமா, மைம்கோபி, தங்கதுரை,கோதண்டம், அனில் முரளி, திருநாவுக்கரசு அனைவருமே கனகச்சிதமான நடிப்பை கொடுத்து படத்தின் உயிர்நாடியாக விளங்குகிறார்கள்.

ஒளிப்பதிவு-பிரவீன், இசை-சுந்திரமூர்த்தி, எடிட்டர்-பிரவீன் ஆகிய மூவரின் பங்களிப்பு படத்திற்கு பலம் மட்டுமல்ல (பட)வெற்றிக்கு உறுதுணையாக உழைத்திருக்கிறார்கள்.

பாபு தமிழின் திரைக்கதையை ஆச்சர்யமூட்டும் வகையில் படைத்திருக்கிறார்.

இயக்கம்-வி.ஜே.கோபிநாத். குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடியை புத்தக அறிவை கொண்டு சாமன்ய இளைஞன் எப்படி சமாளிக்கிறான் என்பதை முக்கோண ரீதியில் கதையை சொல்லி, அதை இணைக்கும் புள்ளியாக கச்சிதமாக இயக்கியிருக்கிறார் வி.ஜே.கோபிநாத். குடும்ப செண்டிமெண்ட் கலந்த படத்தை புத்திசாலித் ;தனமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வித்தியாசமான கதைக்களத்தால் பிரமாதப்படுத்தி அசத்தலான வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் எட்டு தோட்டாக்கள் இயக்குனர் வி.ஜே.கோபிநாத்.

 

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *