Music Video Album released by ” Iniya “

0

Audio Video Album released by ” Iniya “.

 

இசை வீடியோ ஆல்பம் வெளியிட்டார் இனியா..!

யுவன் சங்கர் ராஜாவுடன் இனியா அமைத்த இசை கூட்டணி..!

இனியாவின் பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா..!

தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா.

அந்த வகையில் தற்போது தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இனியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன.

கடந்த வருடம் மலையாளத்தில் ‘பரோல்’ மற்றும் ‘பெண்களில்ல’ ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகையாக 2018ஆம் வருடத்திற்கான ‘கேரளா ஃபிலிம் கிரிட்டிக்’ விருதைப் பெற்றுள்ளார் இனியா. அதுமட்டுமல்ல பரோல் படத்தில் நடித்ததற்காக 2018 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான ‘பிரேம் நசீர் பவுண்டேஷன்’ விருதையும் பெற்றுள்ளார்.. 2018 ஆம் வருடம் தனக்கு மகிழ்ச்சிகரமான ஒரு ஆண்டாக அமைந்து விட்டதாக கூறும் இனியா, 2019ஆம் வருடமும் இதேபோல மிக சிறந்ததாக இருக்கும் என நம்புகிறார்.

நடிப்பு ஒருபக்கம் இவரை மொழி பாகுபாடில்லாமல் துரத்திக் கொண்டிருக்க இனியாவோ, தனக்கு ஆத்மார்த்த திருப்தி தரும் இசையையும் நடனத்தையும் துரத்திக் கொண்டு இருக்கிறார். ஆம்.. இசை மற்றும் நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. இதனாலேயே நடிகைகளில் எவரும் இதுவரை செய்திராத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை ‘அமையா என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் மூலம் தானே சொந்தமாக தயாரித்துள்ளார் இனியா.. இந்த பாடலை டீம் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

‘Lets dance’ என்கிற சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்ளவதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தைக் கற்றுக் கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான்.. இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான Divo மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா.. இதுபற்றி இனியா கூறும்போது, “நான் ஒரு டான்சர் என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன்.. ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆல்பத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ‘டீம் மியா’வுக்கு மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்றும் உறுதியாக கூறுகிறேன்.. மியா டீமில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதை வெளியிட்டுள்ள பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான Divo மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கும் மற்றும் beyond frames நிறுவனத்திற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் இனியா.. ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் வீடியோ ஆல்பம் மற்றும் படத்தயாரிப்பு என இனியா தனது எல்லைகளை விரிவாக்கி இருப்பது அவரை மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

 
 

Ineya: Music, movies & more

“2019 has been an enthusiastic year for me. Acting with Mammootty sir is always a learning process,” starts off Ineya on a positive note. The ‘Vaagai Sooda Vaa’ girl has shared the screen space with Mammootty once again in ‘Maamangam’, which is releasing in 4 languages.
Her character name is Unni Neeli which is Directed by Padmakumar & Produced by Venu kunnapilly’s KAVYA FILMS.

Besides being part of a bunch of interesting films in happy wheels multiple languages, Ineya is also involved in music. Ineya, who has immense love for music and dance, has produced an album called MIA, through her own banner AMAYA ENTERTAINMENTS.

She has released the album in association with Divo and Yuvan Shankar Raja’s U1 Records. “I am happy to make a single track album by collaborating dance and music,” says Ineya,will continue to do more music videos like this ..!!!

MIA concept & choreography done Arun Nandakumar .Also he acted the lead character opposite Ineya.The visuals captured by Abhi reji & Lawell.Song is amazingly composed by Music Director Ashwin Johnson &  lyrics by Govardhan Palanisamy.Singer Synora Philip has given life to the song with her versatile voice..

The music video itself is an inspirational song about a girl looking for her aim..[MIA-AIM ]Telling about her upcoming movies ., She plays the role of a police officer Sathyabhaama in the film ‘Coffee’ in Tamil which is directed by Sai Krishna and produced by Om Cine Ventures. It’s a Heroine Centric movie in which Bollywood actor Rahul Dev comes in a pivotal Villian role. The story is based on a true incident which a girl struggles in the current society. 

Ineya says she had to do some action sequences in the movie & they were composed by Don Ashok. “This will be a strongest movie to go next level. Banglore & Chennai are the major locations..!!!” she states.

Apart from Tamil , Ineya has some good projects in Malayalam & Kannada. She just wrapped up a Malayalam movie ‘Thakkol’ starring Prithviraj’s elder brother Indrajith. The film is directed by Kiran and produced by Shaji Kailas.It’s a family drama in which she plays a Christian girl Zaara. Shoot happened in Goa & Kerala.
 
Ineya has acted in a Kannada movie ‘Drona’ pairing opposite to Sandalwood Super Star Sivarajkumar. She plays Geetha, a typical homely housewife character in her debut project in Kannada industry which will give her a good entry like her first movie ‘Vaagai Sooda Vaaa’ in Tamil.
 
“I am very proud that ‘Kerala Film Critics Awards’ have been announced and I have been adjudged as ‘Best Second Lead Actress Award’ for the films ‘Parole’ in which I paired opposite to Mega Star Mammootty Sir & ‘Pengalilla’ which is directed by T V Chandran  Sir. Also I got ‘Prem Nazir Foundation Award’ for ‘Parole’ directed by Sarath Sandit.’

She signs off by saying, “In 2018 I was very happy to work with big superstars. I believe 2019 too will be a great year for me.”

 
 
Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *