Audio & Trailer Launch of ” Ellam MellaIrukuravan Pathuppan “

0
 

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்ற வார்த்தை தமிழ்சினிமாவில் மிகப்பிரபலம். சாதாரண மக்களிடையும் அந்தச் சொல் செல்வாக்கு மிகுந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கவிராஜ் இயக்கும் இப்படத்தில் ஆரி ஹீரோவாக நடிக்கிறார். சயின்ஸ் சம்பந்தப்பட்ட happy wheels கதை அம்சம் உள்ளபடம் என்ற புரிதலை நேற்று வெளியான ட்ரைலர் உணர்த்தியது. நேற்று நடைபெற்ற ஆடியோ& ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு மறைந்த இப்ராஹிம் ராவுத்தரின் குடும்பத்தினரை வாழ்த்தியதோடு அவர்களின் நீண்ட இடைவேளைக்குப் பிறகான திரைப்பயணத்தில் இப்படம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்றும் கூறினார்கள். பாக்கியராஜ், ஆர்.வி உதயகுமார், அமீர் ஆகியோர் ஆடியோ வெளியீட்டு விழாவை வெற்றிவிழா போல மாற்றி அசத்தி விட்டார்கள். அதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது

 

Share.

Leave A Reply