” Parvathy hospital ” restores arm movement of a young girl avoiding upper limb amputation

0

” Parvathy hospital ” restores arm movement of a young girl avoiding upper limb amputation.

விபத்தில் நசுங்கிய கைக்கு சிகிச்சையளிக்க சிக்கலான பல அறுவைசிகிச்சை செயல்முறைகளை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கும் பார்வதி மருத்துவமனை !

 

மேற்புற கையை வெட்டியெடுப்பதை தவிர்த்து,  கையின் இயக்கத்தை  இந்த இளம் பெண்ணுக்கு இதன்மூலம் வழங்கியிருக்கிறது

 

இந்நோயாளியின் கை பெருமளவு நசுங்கியதோடு, மேற்புற கை இயக்கத்திறன்களின் இழப்பும் ஆர நரம்பு காயமும் விபத்தினால் ஏற்பட்டன

 

சென்னை, 28 ஆகஸ்ட், 2019: ஒரு சாலைப்போக்குவரத்து விபத்தில் 20 வயதான இளம் பெண் ஒருவருக்குஅவரது வலது கை நசுங்கியதால் கடுமையான காயம் ஏற்பட்டது.  அத்துடன் ஆர நரம்பு காயத்தின் காரணமாகமணிக்கட்டு தொங்குகின்ற பாதிப்பும் ஏற்பட்டது.  இந்த இளம் நோயாளிக்கு சிக்கலான பல அறுவைசிகிச்சைகளை உள்ளடக்கிய தனித்துவமான சிகிச்சையை தாங்கள்  வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக சென்னையைச் சேர்ந்த பார்வதி மருத்துவமனை இன்று அறிவித்திருக்கிறது.  எலும்பு முறிவியல் அறுவைசிகிச்சைத் துறையின் இயக்குனர் டாக்டர் தர்மராஜன், எலும்பு முறிவியல் துறையின் முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மிதுன், மற்றும் பார்வதி மருத்துவமனையின் முதுநிலை பிளாஸ்டிக் அறுவைசிகிச்சைத் துறையின் மருத்துவர் டாக்டர் அருள் ஆகியோர் தலைமையில் செயல்பட்ட அறுவைசிகிச்சை நிபுணர்களின் குழுசவால்கள் நிறைந்த அறுவைசிகிச்சை செயல்முறைகளை மேற்கொண்டது.  மேற்புற கை வெட்டப்படுவதை வெற்றிகரமாக தவிர்த்திருப்பதோடுநோயாளியின் கை இயக்கத்திறனை அவர் மீண்டும் பெறுவதற்கு இந்த அறுவைசிகிச்சைகள் ஏதுவாக்கியிருக்கின்றன. 

 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்த இளம் பெண் நோயாளியான பொன்னியம்மாள்ஒரு சாலை விபத்தில் சிக்கியபோதுஅவரது கையானது நசுக்கப்பட்டதால் கடுமையான காயம் ஏற்பட்டது.  நரம்பு துண்டானதால்கையை அவரால் அசைக்க இயலவில்லை.  அத்துடன்அதில் உணர்வுதிறனையும் அவர் இழந்துவிட்டார்.  பார்வதி மருத்துவமனைஸ் – ன் எலும்பு முறிவியல் மருத்துவர்களும்பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்களும் இந்நோயாளியை பரிசோதித்தனர். அதில் அப்பெண்ணின் வலது மேற்புற கை நசுங்கியதால் காயமடைந்திருப்பதும் மற்றும் ஆர நரம்பு காயமிருப்பதையும் கண்டறிந்து உறுதி செய்தனர்.  வலது மேற்கையில் எலும்புகள்  நொறுங்கிய கூட்டு முறிவு இருப்பதையும் மற்றும் மணிக்கட்டு தொங்கியிருப்பதையும் மருத்துவ பரிசோதனைகள் உறுதி செய்தன.  இதைத் தொடர்ந்து அப்பெண் நோயாளிக்கு தொடர்ச்சியான அறுவைசிகிச்சை செயல்முறைகள் செய்யப்பட்டன. 

 

பார்வதி மருத்துவமனை – ன் முதுநிலை எலும்பு முறிவியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மிதுன் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து விளக்கியபோது, “இந்நோயாளிக்கு முழுமையாக வலது கை நசுக்கப்பட்டிருப்பதும், இயக்கத்திறனோடு உணர்திறனும் இழக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.  தொடக்கத்தில் வெளிப்புற ஃபிக்ஸேட்டர் மூலம் தற்காலிகமாக எலும்பு முறிவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றும் சிதைந்த திசுவை அகற்றுவதற்கும், காயம் ஆறுவதை ஊக்குவிப்பதற்கும் அவரது வலது கையில் ஒவ்வொரு நிலையாக புண்ணான பகுதியில் இறந்த திசுக்களை நீக்கும் சிகிச்சை செயல்முறைகள் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டன.  அப்பெண்ணின் கையில் இருந்த உயிரற்ற திசுக்களை அகற்றுவதற்கு இத்தகைய திசு நீக்கல் செயல்முறைகள் அவசியமாக இருக்கின்றன.  அதன்பிறகு, ஆழமான காயங்களை மறைத்து மூடுவதற்காகவும் மற்றும் கையின் இயக்கத்திறனை மீண்டும் கொண்டு வரவும் மற்றும் மூட்டுகளில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கவும் SSG என அழைக்கப்படும் ஸ்பிளிட் ஸ்கின் கிராஃப்டிங் (தோலினை ஒட்டுதல்) சிகிச்சைமுறை செய்யப்பட்டது,” என்று கூறினார்.

 

இது குறித்து டாக்டர் மிதுன் மேலும் பேசுகையில்,  “ஒருமாத காலம் கண்காணிப்பின் கீழ் இருந்ததற்குப் பிறகு, உடைந்த எலும்புகளை மறுகட்டமைப்புடன் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக திறந்த நிலை குறைப்பு மற்றும் உள்ளார்ந்த பொருத்துதல் (ORIF) மற்றும் எலும்பு ஒட்டு சிகிச்சை செய்யப்பட்டது.  இது, மிகவும் சிக்கலான ஒரு சூழ்நிலையாகும்.  காயம் முறையாக ஆறுவதற்கும் மற்றும் அவரது மேற்கையில் இயல்பான இயக்கத்திறனை திரும்பப் பெறுவதற்காகவும் வெற்றிகரமாக அறுவைசிகிச்சைகளை நாங்கள் செய்திருக்கிறோம்,” என்று கூறினார்.

 

பார்வதி மருத்துவமனையின் எலும்பு முறிவியல் அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். தர்மராஜன் பேசுகையில்,  “இந்த சிகிச்சை செயல்முறைகள் பாதுகாப்பானவையாக,அதிவேக திறன் கொண்டவையாக மற்றும் குறைந்த செலவீனத்தில் மேற்கொள்ளப்படுபவையாக இருந்தன.  நரம்பு காயத்துடன் கை கடுமையாக நசுங்கியதால் ஏற்பட்ட காயமும் இருந்ததால், அதையும் மீறி எலும்புகளின் மறுகட்டமைப்பை மேற்கொண்டு கையின் இயக்கத்திறனை திரும்பவும் கொண்டு வருவதென்பது, சவால்மிக்க ஒரு பணியாக இருந்தது.  நசுக்கப்பட்ட அப்பெண்ணின் கையை நாங்கள் இறுதியில் காப்பாற்றினோம்.  நொறுங்கிய எலும்பு முறிவுகள் நன்றாக குணமாகின.  அவரது மேற்புற கையில் முடிந்தவரை இயல்பான இயக்கத்திறன்கள் திரும்பவும் கிடைத்திருக்கின்றன.  இந்த சிகிச்சை செயல்முறைகளின் மூலம் அவளது மேற்புற கையை வெட்டியெடுக்கவேண்டிய அவசியத்தை நாங்கள் தவிர்த்து, அந்த இளம் பெண்ணின் எதிர்கால பாதுகாப்பை உறுதிசெய்திருக்கிறோம்,” என்று கூறினார்.

 

இந்த இளம் பெண் நோயாளி, தனது பாதிப்பிலிருந்து மீண்டது குறித்து பேசுகையில், “பிற மருத்துவமனையில் எனது கையை வெட்டி எடுத்தாக வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்ட நிலையில், பார்வதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், எனது கை கடுமையாக நசுங்கியிருந்தபோது, சிறப்பான சிகிச்சையினை எனக்கு வழங்கியிருக்கின்றனர்.  இதன்மூலம் எனது மேற்புற கையின் செயல்பாட்டை என்னால் திரும்ப பெறமுடிந்திருக்கிறது.  எனது கையால் என்னால் இப்போது அசைக்க முடிகிறது.  கூடியவிரைவில் என்னுடைய இயல்பான பணிகளை, எனது காயமடைந்த வலது கையைக் கொண்டு செய்யமுடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

4 Attachments

 

 

  ReplyForward
   
Share.

Leave A Reply