Audio & Trailer Launch of ” Edhir Vinaiyattru ” 2day 23/11/19

0

Audio & Trailer Launch of   ” Edhir Vinaiyattru  ” held 2day 23/11/19 @ Prasad Lab by 11.am.

விழாவில் அலெக்ஸ் பேசிம்போது, ‘இந்தப்படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றி. டாக்டராக இருந்தவன் எப்படி நடிகராக மாறினார் என்று கேட்டார்கள். எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது happy wheels ஈர்ப்பு உண்டு. முதல் நன்றி என் அம்மாவிற்குத் தான். அவரிடம் ஒருபடத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்றதும், என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப்படத்தை இரவு பகலாக உழைத்து 24 நாட்களில் முடித்தோம். அதற்கு காரணம் என் டைரக்‌ஷன் டீம் தான். ஆர்.கே.சுரேஷ் அண்ணா சிறந்த நடிகர். அவரை முதலில் புக் பண்ணிவிட்டுத் தான் கதை எழுதினேன். சனம் ஷெட்டி மிகவும் சவுகரியமான நடிகை. மேலும் படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி’ என்றார்.
 
நாயகி சனம்ஷெட்டி பேசும்போது, ‘என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தில் வாய்ப்பு தந்த அலெக்ஸுக்கு நன்றி. தயாரிப்பாளர் அனிதா மேடம் அவர்களுக்கும் நன்றி. படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒளிப்பதிவாளர் சாருக்கு நன்றி. சில பிரேம்களில் என்னை ஆச்சர்யமாக பார்க்க வைத்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் அவர்களுடன் பணியாற்றியது பெரும் மகிழ்ச்சி. அலெக்ஸ் தெளிவான நபர். எல்லாவற்றையும் நன்கு திட்டுமிட்ட வேலை செய்யக்கூடியவர். இந்தப்படம் பெரியளவில் பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்’என்றார்.
Share.

Leave A Reply