Title Look of Telugu film ” Janu ” remake from Tamil movie ” 96 “

0

Title Look of Telugu film ” Janu ” remake from Tamil movie ” 96 “.

 

96 தெலுங்கு ரீமேக் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது!

விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான 96 திரைப்பபடம் பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் கல்லா கட்டியது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை பார்த்த பிற மொழி திரைத்துறையினர் அவர்களின் மொழிகளில் 96 திரைப்படத்தை ரீமேக் செய்ய முயற்சி செய்கின்றனர். 
 
அந்த விதத்தில் கன்னட மொழியில் 99 என்கிற தலைப்பில் இந்த படத்தின் ரீமேக் எடுக்கப்பட்டு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. இப்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் ஷர்வானந்து நடிப்பில் இந்த படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. 

இந்த நிலையில் இப்போது அந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஜானு என்கிற தலைப்பில் இணையத்தில் வெளியாகி, தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். ஜானு திரைப்படத்தின் மூலம் த்ரிஷாவை மிஞ்சுவாரா நடிகை சமந்தா…? அதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!

Share.

Leave A Reply