Pooja of ” Bomma Kathi ” movie

0

Pooja of ” Bomma Kathi ” movie.

 

அம்மா திரையரங்கம் திறக்கப்பட வேண்டும் !*
*டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்.*
*”பொம்ம கத்தி” திரைப்படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.*
*மாண்புமிகு நீதியரசர் A.R.செல்லகுமார் அவர்கள், A.D.G.P உயர்திரு A.சுப்ரமணியன் IPS, சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தின் தலைவர் நன்பர் தமிழமுதன், உமர் பிலிம்ஸ் உமர் பஷீர் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.*
*சைதன்யா கிரியேஷன்ஸ் சைதன்யா சங்கரன் மற்றும் இயக்குனர் D.லோகநாதன், ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.*
*இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் …*
*” தமிழகத்தில் உடனடியாக அம்மா திரையரங்கம் திறக்கப்பட வேண்டும்.*
*சுமார் 750 படங்கள் முடிந்த நிலையில் வெளிவர முடியாத நிலையில் உள்ளது.*
*அம்மாவின் அரசு என்று சொல்லி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய அரசு, மறைந்த புரட்சி தலைவி +அம்மா ஜெயலலிதா அவர்களின் திட்டமான அம்மா திரையரங்கம் திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.*
*டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானத்திற்கு அடுத்தபடியாக அரசுக்கு வருமானம் தரும் துறை திரைப்பட துறைதான்.*
*மிகவும் கௌரவமாக வருமானம் பெறும் துறை இதுவே.*
*ஆனால் அந்த துறை நாளுக்கு நாள் நலிந்து கொண்டு வருகிறது. படங்களை எடுப்பதை விட வெளியிடுதல் மிகவும் சிக்கலான உள்ளது.*
*அனைத்து தியேட்டர்களும் குறிப்பிட்ட சிலருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.*
*அரசு இதை கவனித்தில் கொண்டு திரை உலகைப் காப்பாற்ற வேண்டும்.*
*புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் திட்டமான அம்மா திரையரங்கத்தின் பணிகள் உடனடியாக துவங்கி ஏழை எளிய மக்கள் அனைவரும் அனைத்து திரைப்படங்களையும் குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் “*
*என்று பேசினார் சுபாஷ்.*
*இந்த நிகழ்வு வளசரவாக்கம் அருகில் உள்ள சக்தி பேலஸில் நடைபெற்றது.*
*ராஜகோபால், தனபால், ஸ்ரீ மகாவீர் பாண்டியன், விஜய் முருகன் உட்பட்ட பலர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.*
Share.

Leave A Reply