Simbhu Speach at College

0

Simbhu Speach at college.

கீழே நிக்கிறவன்தான்டா சூப்பர் ஸ்டாரு..; கல்லூரி விழாவில் சிம்பு மாஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் சிம்பு.

அப்போது அவர் பேசியதாவது..

“இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொண்டது மகிழ்ச்சி.

எஃப் 1 கார் ரேஸ் உங்களுக்குத் தெரியுமா.? அதில் நிறைய சுற்றுகள் இருக்கும். தொடர்ந்து வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருக்க முடியாது. அதற்காக பிட் ஸ்டாப் இருக்கும்.

அங்கு நிறுத்தி காரின் தேய்ந்து போன டயர்களை மாற்றி, பெட்ரோல் நிரப்பி, தொடர்ந்து ஓட்ட வேண்டும்.

 

இப்போதும் சொல்வேன். முதலில் யார் முதலிடத்தை அடைகிறார்கள் என்பதே முக்கியமல்ல. கடைசியில் யார் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களுடைய அன்புதான் என்னை இப்பவும் சினிமாவில் வைத்திருக்கிறது..

சின்ன வயசுலே இருந்தே நடிக்கிறேன். எனவே தான் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேன். அதற்காக கோபித்துக் கொள்ளாதீர்கள்.

திரும்ப வந்துவிட்டேன். இனிமேல் எப்போதும் உங்களைவிட்டு போகமாட்டேன்.

நாம் வெற்றி பெறும் போது நம் பின்னால் நிறைய பேர் வருவார்கள். நம் பின்னால் ஒரு கூட்டமிருக்கும். ஆனால் ஒருவன் தோல்வியடைந்துவிட்டான் என்று சொன்னப்போதும் எனக்காக நின்றீர்களே. உங்களை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்.

ஒவ்வொரு படம் கதையில் கதாபாத்திரங்கள் இருக்கும். அதில் ஒருவன் தொடர்ந்து கஷ்டப்படுகிறான். அனைவரும் அவனை மேலே வரவிடாமல் தடுக்கின்றனர். அவனது காதலில் பிரச்னை வருகிறது.

 

ஆனால் கடைசியில் ஜெயிக்கிறான். அவனது பெயர்தான் ஹீரோ. இன்னொரு கதாபாத்திரம் ஆரம்பத்திலிருந்தே எந்த பிரச்னையுமின்றி ஜெயித்துக் கொண்டே இருக்கிறான். மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கிறான். அவனுக்கு பெயர் வில்லன்.

படத்தைப் போல் தான் நிஜவாழ்வும். ஒருவன் மேலே வருவதை தடுத்து கீழே தள்ளுகிறார்கள். வளரவிடாமல் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோவாக என்னை நீங்களும் கடவுளும் ஆக்கியிருக்கிறீர்கள்.

அண்ணாமலை படத்தில் இடைவேளை சமயத்தில் வில்லன் உயர்ந்து மேலே நிற்பார்.

தலைவன் கீழே நிற்பார். அவர்தான் ஹீரோ சூப்பர் ஸ்டார். மேலே நிற்பவர் அல்ல. அதனால் நான் கவலையேபடமாட்டேன்.” என பேசினார் சிம்பு.

 

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *