Pooja of ” Reel Anthu Poachu “

0

Pooja of   ” Reel Anthu Poachu  “.

 

Pooja of   ‘  Reel Anthu Poachu  ‘

சினிமா கலைஞர்களின் வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல வருகிறது “ரீல் அந்து போச்சு”!*
“காலிடஸ் மீடியா” தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நூர்தீன் இயக்கும் “ரீல் அந்து போச்சு” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் கதாநாயகனாக ஆதித் அருண் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “24 KISSES” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இப்படத்திற்கு நந்தா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓமர் பணிபுரிகிறார். பாஸ்கர் சுப்ரமணியன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். காலிடஸ் மீடியா சார்பில் வி.கே.மதன் மற்றும் குர்ரம் கௌதம் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் துவக்க விழாவில் பேசிய நடிகர் ஆதித் அருண்,
“இந்தப் படம் எனக்கு தமிழில் ஒரு மறு அறிமுகம் மாதிரிதான். “இனிது இனிது”, “தங்க மகன்” படங்களுக்குப் பிறகு தமிழில் இப்போது தான் நடிக்கிறேன். இந்தப் படம் நிச்சயமாக ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும். முழுக்க முழுக்க காமெடி கலாட்டாகள்  நிறைந்ததாக இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நூர்தீன். சினிமா தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படம் இது. அவர்களது வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும் “ரீல் அந்து போச்சு”, என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
Reel Anthu Poachu –
Technician list
Director : Noordeen
Dop : Omar
Music : Nandha
Editor : Baskar subramanian
Art : Deva
Costume : Valayapathi
Stills. :
Action : Fire Karthik
Choreography : Shiv rock Shankar, Ramesh, Ramesh Kamal
Designs : Joxson
P.R.O : Guna
Production Executive : P Raj Kumar
Executive producer : Viji Antony
Producer : V.K.Mathan & Gurram Goutham Kumar
Regards,
*PRO Guna.*
Attachments area
Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *