SIFCC office bearers meets Hon.ble Union Finance Minister Smt. Nirmala Sitharaman Regarding TDS issues.

0

South Indian Film Chamber of Commerce Thanks Hon.ble Union Finance Minister Smt. Nirmala Sitharaman Regarding TDS issues.

 

We First thank Smt. Nirmala Sitharaman, Hon.ble Finance Minister for giving us an opportunity to submit our memorandum and patiently heard our submission and problems of TDS percentage levied on distributors’ share and producers’ share. Hon.ble Minister understood that there is some crucial issues and has to be resolved and instructed to form a special committee with film industry comprising of  Ms. Sumathala, M. P., Shri Prahlad joshi, Hon.ble Minister for Parliamentary Affairs and Mines and Coal, Shri K. Raghu Rama Krishna Raju, M.P., Mr. Katragadda Prasad, Mr. Ravi Kottarakara, Mr. C. Kalyan, Mr. D.R.  Jairaj, Mr. Sa. Ra. Govidu, Mr. Rockline Venkatesh, Mr. K.C.N Chandrashekar, Mr. K. L. Damodar Prasad to discuss and resolve the above issues. The entire film industry is thankful to our Hon.ble Finance Minister for giving this opportunity and for the keen interest to resolve the problems of the film industry.

 ஊடக அறிக்கை
 TDS தொடர்பான குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்த நிதியமைச்சருக்கு நன்றி – தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளான எங்களை சந்தித்து, நாங்கள் அளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வருமான வரி பிடித்தத்தில் (TDS) நடப்பில் உள்ள பகிர்மான விகிதாச்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துரைக்கும் நினைவு பத்திரத்தை பெற்றுக் கொண்டதோடு, இது குறித்த எங்களது கருத்துகள், எண்ணங்களையும் கேட்டு தெரிந்துக்  கொண்ட, மாண்புமிகு இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு முதற்கண் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதுள்ள நடைமுறையில் சில முக்கிய குறைகள் இருப்பதைப் புரிந்துக் கொண்ட நிதி அமைச்சர், உடனடியாக அதனை தீர்க்கும் விதமாக, திரைப்படத்துறையினரையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழு அமைத்திட உத்தரவிட்டார். திருமிகு. சுமலதா எம். பி, திருமிகு. பிரஹலாத் ஜோஷி, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர், திருமிகு. கே. ரகுராம கிருஷ்ண ராஜூ எம். பி., திரு. காட்ரகட்ட பிரசாத், திரு. ரவி கொட்டாரக்கரா, திரு. சி. கல்யான், திரு. டி ஆர். ஜெயராஜ், திரு. சா. ரா. கோவிந்து, திரு. ராக்லைன் வெங்கடேஷ், திரு. கே சி என் சந்திரசேகர், திரு. கே எல் தாமோதர் பிரசாத் ஆகியோரைக் உறுப்பினர்களாகக் கொண்ட இக்குழு, குறைகளை களைய தேவையான விஷயங்களை விவாதித்து, தீர்வை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.  சந்திக்க வாய்ப்பு வழங்கி, எங்களது குறைகளைக் கேட்டும், அதனை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் உதவிய, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரைத்துறையினர் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக காட்ரகட்ட பிரசாத் தலைவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ரவி கொட்டாரக்கரா செயலாளர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை




South Indian Film Chamber of Commerce
President : Katragadda Prasad
9884444679
Thanks
Nikil Murukan

 

Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *