” Verdict ” Philippines movie

0

” Verdict ” Philippines movie..

Image may contain: one or more people and text

 

ஆணாதிக்க சமூகம் தாங்கள் வகுத்த சட்டங்கள், அற நெறிகள்,கோட்பாடுகள் மூலம் பெண்களை வஞ்சிப்பதை மிகத்துல்லியமாக சித்தரித்த திரைப்படம் ‘வெர்டிக்ட்’.
பிலிப்பைன்ஸ் திரைப்படமாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக உலகம் முழுக்க பெண்களின் பாடுகளை சித்தரிக்கும் சித்திரம் ‘வெர்டிக்ட்’.
குடி நோய்க்கு அடிமையான ஒருவன் தன் மனைவியையும்,குழந்தையையும் அடித்து கொடுமைப்படுத்தும் காட்சியில் பரபரப்பாக துவங்கும் இப்படம் தொடர்ச்சியாக பரபரப்பை தக்க வைப்பதில் பெருவெற்றி கண்டிருக்கிறது.
படத்தில் இடம் பெற்ற நீதிமன்றக்காட்சிகள் அனைத்தும் பிலிப்பைன்ஸ் கள நிலவரத்தை கவனமாக பதிவு செய்திருக்கிறது.
இயக்குநர் ரேமுண்ட் ரிபே குட்டியரேஸ் திரைக்கதையை வடிவமைத்த விதத்திலும், கேமரா கோணங்களை திட்டமிட்டதிலும் ஒத்திசைவை கொண்டு வந்து பார்வையாளர்களை எளிதாக பதற வைக்கிறார்.
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய திரை மொழி தெரிந்தால் மட்டும் போதாது.
அவர்கள் வலியை உணரும் வலிமை மிக்கவராக இருத்தல் அவசியம்.
முக்கியமாக சிந்தையில் ‘மீன் குழம்பு பாத்திரம் தாழ்ந்தது’ என்ற அகந்தை இருக்கக்கூடாது.
இயக்குநர் ரேமுண்ட் ரிபே குட்டியரேஸ் அவர்களுக்கு அது அறவே இல்லை.
Share.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *