” Ka / Pa Ranasingham ” movie review.

0

Vijaysethupathy film Ka/ Pa Ranasingham released today 2.10.2020 in Ott ZEE5.

 

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் விருமாண்டி

கிராம்த்தில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முன்னால் வந்து குரல் கொடுக்கும் விஜய் சேதுபதிக்கு. அப்படி இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா ராஜேஷுடன் காதல் மலர்ந்து திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் விஜய் சேதுபதி.

துபாய் செல்லும் விஜய் சேதுபதி, அங்கு பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.அங்கு சிக்கி இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் விஜய்சேதுபதியை மீட்டெடுக்கும் சிங்க பெண்ணாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவரைக் காப்பாற்ற ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அவர் படும் அவலங்கள், தான் இந்த படம். தனது கணவரை வெளிநாட்டிலிருந்து. எப்படி காப்பாற்றி கொண்டு வந்தாா் ஐஸ்வர்யா ராஜேஷ்? விஜய் சேதுபதிக்கு என்ன நடந்தது என்பதை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூட்டி சிறந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவும் கதாபாத்திரத்தில் வரும் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி, ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜ் காமராஜா போன்றோரின் நடிப்பும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன் இறந்து விட்டால் அவரின் உடலை நம் நாட்டுக்கு கொண்டுவர எந்த அளவுக்கு வேத கஷடம் பட வேண்டும் என்ற உண்மையை மிக அழகாக பதிவு செய்கிறார். இப்படம் ஒரு மிக சிறந்த படைப்பு , உணர்வும் உணர்ச்சி மிகுந்த படைப்பு , நிச்சயமாக விருமாண்டி மிக சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்.

Share.

Comments are closed.