Tamil Film Producer Council election 2day 22.11.2020

0

Tamil Film Producer Council election 2day 22.11.2020.

Election today started by 8.00am. Total 1303 votes.

*இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303

*மொத்தமுள்ள 27 பொறுப்புகளுக்கு112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

*தலைவர் பதவிக்கு போட்டியிடும்
ராமசாமி@முரளி,
T.ராஜேந்தர்,
P.L.தேனப்பன் ஆகிய மூவரும் முதல் முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்

*துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அணியின் சார்பில் போட்டியிடும்
சிவசக்தி பாண்டியன்
R.K.சுரேஷ், P.T.செல்வகுமார்
அடிதடி முருகன் இவர்களை காட்டிலும்
சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவடிவேலன்
கதிரேசன் இருவரும் கடும் போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

*கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திரபோஸ் இடையில் கணிக்க முடியாத போட்டியாக உள்ளது.

*பொருளார் பதவிக்கு அணியின் சார்பில் போட்டியிடும் கே.ராஜன்-சந்திரபிரகாஷ் ஜெயின் இருவருக்குமான போட்டி சந்திரபிரகாஷ் ஜெயின்-சுயேச்சையாக போட்டியிடும் JSK சதிஷ்க்குமான போட்டியாக மாறியுள்ளது

*நலம் காக்கும் அணி சார்பில் நேற்றைய தினம் வாக்களர்களுக்கு வழங்கப்பட இருந்த அன்பளிப்பை வழங்கவிடாமல் எதிர் அணி காவல்துறையில் புகார் செய்து தடுத்ததால் அவர்களுக்கான ஆதரவு வாக்கு நலம் காக்கும் அணிக்கு ஆதரவாக மாறியுள்ளது.

*ஒட்டுமொத்தமாக ஒரே அணி வெற்றியை அறுவடை செய்வது சாத்தியமில்லை

*சுயேச்சைகள் ஆதிக்கம் துணை தலைவர் பதவியில் இருப்பதற்கு காரணம்”கரன்சி மழை” வளமாக சென்றந்ததே காரணம் என்கின்றனர்.

*60% வாக்காளர்கள் அன்பளிப்பு, கரன்சிகளை வேண்டாம் என கூறியுள்ளனர்

*இன்று நடைபெற்றுவரும் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தரப்பில் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது

*இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

*நாளை23.11.2020 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.