தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்ப்பட்ட சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல அறியப்படா நாயகர்களான , தன்னார்வளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் , ஊக்குவிக்கும் விதமாகவும் அகரம் பவுன்டேஷன் இரண்டு நாள் நிகழ்வு ஒன்றை ஏற்ப்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் வெள்ளம் ஏற்ப்பட்ட சமயத்தில் அகரம் பவுன்டேஷனும் உடனடி உதவிகள் பலவற்றை செய்தது. அகரம் பவுண்டேஷன் கல்வி சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் முதற்கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்து அந்த பள்ளிக்கு தேவையான உதவிகள் , பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் போன்றவற்றை மேற்கொள்ளவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கச்சூர் , நெல்லூர் , happy wheels கிரகம்பாக்கம் என்ற மூன்று கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவுள்ளோம். கல்வி , மருத்துவம் என அந்த பகுதிக்கு தேவையான உதவிகளை அகரம் பவுன்டேஷன் செய்யவுள்ளது.
தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தன்னார்வளர்களையும் , வெள்ளம் போன்ற பேரழிவு சமயத்தில் மீட்ப்பு பணிகளை கையாளும் தேர்ச்சி பெற்ற நிபுணர்களையும் ஒருங்கிணைத்து இரண்டு நாள் மாநாடு ஒன்று அகரம் பவுண்டேஷன் சார்பில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதி செயின்ட்.பீட்டர்ஸ் பள்ளி மைதானத்தில் வைத்து நடைப்பெறவுள்ளது. புதிய தலைமுறை , தி ஹிந்து மற்றும் அகரம் பவுண்டேஷன் இணைந்து இம்மாநாட்டை நடத்தவுள்ளது.
Video link link below