Audio Launch of KAADHAL KAALAM. Cheif Guest : Director –
பாண்டியர் காலத்தில் மீன்கொடி பறந்தது ,சேர காலத்தில் வில் அம்புக் கொடி பறந்தது, சோழ்
காலத்தில் புலிக்கொடி பறந்தது இந்தக் காதல் காலத்தில் தமிழ்க்கொடி பறந்தது. ஆம்,
தமிழ்க்கொடி பிலிம்ஸ் வெப்படை ஜி செல்வராஜ் தயாரிப்பில் உருவான காதல் காலம் படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழா ஆர் கே வி ஸ்டுடியோவில் நடந்தது.
இசையமைப்பாளர் ஜெயானந்தன் இசையில் உருவான happy wheels காதல் காலம் படத்தின் பாடல்களை
இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட அவரது சிஷ்யர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.
காதல் காலம் படத்தை இயக்கியவரும் பாக்யராஜிடம் பல படங்களில் உதவியாளராகப்
பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்தைப பற்றிக் கேள்விப்பட்ட காதல்
இளவரசன் கமல்ஹாசன் படக்குழுவினரை தமது அலுவலகத்துக்கே வரவழைத்து படத்தின்
டிரையலரை வெளியிட்டுப் பாராடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாண்டியராஜன் , “இந்த விழா பல நாட்கள் தள்ளிப்போய் இன்று
நடைபெறுகிறது… தாமதமும் நல்லது தான் என்று எடுத்துக் கொள்ளவீண்டும். நான்
இயக்குனரிடம் (பாக்யராஜிடம்) உதவியாளராகப் பணியாற்றிய போது அவரது
எல்லாப்படங்களுக்கும் எம் ஜி ஆர் வந்துவிடுவார்… அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்
கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன் … கடைசியில் ஒருவழியாக எடுத்துவிட்டேன்…. எனக்கு
இந்தப் பக்கம் எம் ஜி ஆர் அந்தப் பக்கம் டைரக்டர் … எல்லோரும் பார்த்துப் பார்த்துப்
பொறாமைப்பட்ட அந்தப் புகைப்படத்தை கடைசியில் யாரோ திருடி விட்டாரகள்… அதன் பிறகு ,
நான் இயக்கிய கன்னிராசி படவிழாவில் கலந்து கொண்டதோடு எனது திருமனவிஜாவிற்கும்
வந்திருந்தார்… எனது கையப்பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்த வீடியூலாம் இருக்கு…
போட்டோவைத்தான் மிஸ் பண்ணினேன் ஆனால் வீடியூவே கிடைத்து.. அதுபோல் இந்தப்
படத்தை இயக்கிய சோமசுந்தராவும் மிகவும் தாமதமாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்….
மிகப்பெரிய வெற்றிபெறுவார்…” என்று பேசினார்.
ஆடியோவை வெளியிட்டுப் பேசிய கே.பாக்யராஜ், “ பாரதி சோமு என்று அழைக்கப்படும்
சோமசுந்தரா மிகக் கடினமான உழைப்பாளி… எழுத்தாளராக இருந்து பத்திரிக்கயாளராக மாறி
இன்று இயக்குனராக அறிமுகமாகிறார்…. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பாக்யராஜ்
படத்தை பார்த்தது மாதிரியே இருக்கிறது என்று சொன்னாராம்… அது தான் குருவுக்கும்
பெருமை… அதைப்போல எனது அனுமதி இல்லாமலேயே முதல் நாள் கிளாப்போர்டைத்
துக்கிட்டு வந்த பாண்டியராஜனை நான் திட்டி ஓரமாக நிற்கவைத்தேன் … அன்று முழுவதும்
ஓரமாகவே நின்று கொண்டிருந்தவரைப பின்பு உதவியாலராகs சேர்த்துக் கொண்டேன்… இன்று
நிகழ்ச்சிக்கு அவர் வரும் வரை நான் காத்திருக்க வேண்டியதாகிப்போய்விட்டது…. எதற்குச
சொல்கிறேன் என்றால் எனது உதவியாளர்கள் வளர்வதில் எனக்குப் பெருமைதான்… எனது
காம்பவுண்டுக்குள் வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இயக்குநராகி
விட்டார்கள் …
k.Bakyaraj & Pandiyarajan.
TAMILKODI FILMS
VEPPADAI G. SELVARAJ
PRESENTS
“KAADHAL KAALAM”
(காதல் காலம்)
(STRAIGHT TAMIL MOVIE)
ARTIST’S LIST
HERO : CHANDRU
HEROINES : NITHYA SHETTY, CHARVEE CHECKUREE,
OTHER CHARACTERS : RAKSHANA MOURIYA, MADHUMITHA, GEORGE, ASHOK
PANDIYAN, PUVI N.ARAVINDH , RAFFIK
TECHNICIANS LIST:
PRODUCED BY : VEPPADAI G.SELVARAJ
STORY,SCREENPLAY, DIALOGUE, DIRECTION : G.A. SOMASUNDHARA
MUSIC DIRECTOR : S. JEYANANTHAN
CINEMATOGRAPHER : VIJAY
EDITING : SHANMUGAM VELUSAMY
ART DIRECTOR : SEKAR CHERAN
LYRICS : PALANI BHARATHI, PA.VIJAY,
CHORIOGRAPHY : AJAY RAJ, DEENA, THIRUBHUVAN
STUNT : RAVI SRI CHANDER
PRODUCTION EXECUTIVE : R.G.MARIAPPANRAJAA
P.R.O : N.SARAVANAN
LAB : REAL IMAGE
NA.MUTHUKUMAR, SNEKAN, ILAKKIYAN