சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக லஷ்மன் ஸ்ருதியின்
“சென்னையில் திருவையாறு”விழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டின்
நிறைவிலும் டிசம்பர் 18 முதல் 25வரை சென்னை காமராஜர் அரங்கத்தில்
கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மண்ணின்
தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதுதான் இந்த
விழாவின் நோக்கம். இந்த ஆண்டு இசைவிழாவிற்கு வயது பதினொன்று.
இவ்வினிய விழா இன்று (18 ஆம் தேதி) பிற்பகல் 12.05 மணிக்கு
“வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன்
தொடங்குகியது.
மதியம் 2.50 மணிக்கு கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு
சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷண்” பி.எஸ்.
நாராயணசாமி”அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500 க்கும்
மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” ஒன்றாகச்
சேர்ந்து பாடினர்.
மாலை 5.00 மணிக்கு ”சென்னையில் திருவையாறு”சங்கீத வைபவத்தின்
துவக்க விழாவினை நடனப்புயல் திரு.பிரபுதேவா மற்றும் இசைப் பேரரசி
பத்மபூஷன் பி.சுசீலா அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி
துவக்கி வைத்தனர்.
இசை ஆழ்வார் விருது
இந்த விழாவில் வயலின் மேஸ்ட்ரோ, இசைமாமேதை பத்மஸ்ரீ
”அ.கன்னியாகுமரி”அவர்களின் வாழ்நாள் இசைச்சேவையை பாராட்டும்
முகமாக அவருக்கு” இசைப் பேரரசி பத்மபூஷன் பி.சுசீலா அவர்கள் ”இசை
ஆழ்வார் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவம் செய்தார்”