Ilaignar Kootamaippu

0

  ILAIGNAR  KOOTAMAIPPU   இளைஞர் கூட்டமைப்பு

ikp

 

 

 

 

 

 

 

 

 

 

234 தொகுதிகளிலும் அரசியல் மற்றும் சமூகமாற்றத்திற்கான “விதை” தமிழக இளைஞர்கள் மூலம்விதைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர்அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மாற்றத்தை எதிர்நோக்கும்நேர்மையான திறமையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்துபொதுவான கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும்வாக்காளர் தேர்வு முறைகள் மூலம் இளைஞர்கூட்டமைப்பாக தேர்தல் களம் காணுகின்றனர். இதற்கான முயற்சி கடந்த 2 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்க பட்டது.

நம்மை காப்பாற்ற வானிலிருந்து யாராவது ஒரு தலைவர்வருவார் என எண்ணாமல், மாற்றத்தை உருவாக்க நினைக்கும்ஒவ்வொரு இளைஞனும் தலைவராக உருவாக வேண்டும் என்பதே நமது எண்ணம். ஒரு தனி நபரை முன்னிறுத்தாமல்,நேர்மையான இளைஞர்களையும் மற்றும் தெளிவானகொள்கைளையும் முன்னிறுத்தி கூட்டுத்தலைமை மூலம் மக்களை சந்திக்க உள்ளோம்.

வேட்பாளருக்காக பல்வேறு முதல்கட்ட கேள்விகளைஇணைய தளங்கள் (வாட்ஸ்அப்பேஸ்புக்) மூலமும்பரவவிட்டு அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.அதிலிருந்து சுமார் 300 பேருக்கு நேர்முக தேர்விற்கு அழைப்புவிடுத்து உள்ளோம்.

நேர்முக தேர்வு செய்ய 20 பேர் கொண்ட இளைஞர் குழுஉருவாக்கப்பட்டு, தெளிவான கேள்விகளை வேட்பாளரிடம்தொடுக்க சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இளைஞர் வேட்பாளர் தேர்வு பற்றிய செய்தி பலரையும் சென்று சேரும்போது, நேர்மையான பலரும் வர வாய்ப்புள்ளது. கூடியவிரைவில் 234 தொகுதில் போட்டியிடும் அரசியல் ஆர்வம்உள்ள நேர்மையான, திறமையான, அர்ப்பணிப்பு கொண்டஇளைஞர்களை முன்னிறுத்துவோம்.

 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு 234சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே தெரிகின்றது. வார்டுகவுன்சிலர், மேயர், நகராட்சி தலைவர் என 1.25 லட்சம்அரசியல் சார்ந்த பதவிகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் அக்டோபர் மாதம் வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் போட்டியிடுவர்.

“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் எனஇளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.தற்போது அரசியலிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தை சிறந்தமாநிலமாக உருவாக்கும் முயற்சியில், நாளையதலைமுறையை காக்க நேர்மையான இளைஞர்கள் களம்காணுகின்றனர்.

எந்தெந்த தொகுதியில் அதிகமாக செயல்வீரர்கள்கிடைக்கின்றனரோ, அங்கு முழுமையாக பிரச்சாரம்செய்வோம். சமீபத்திய வெள்ளத்தில் இளைஞர்கள் இறங்கிவேலை செய்தது போல, ஒவ்வொருவராலும் தன்னால்இயன்ற நிதியை வைத்து, இளைஞர்கள் மற்றும் மக்களேபிரச்சாரம் செய்து வேட்பாளரை தேர்வு செய்வர்.

தமிழக இளைஞர்களுக்கு தங்களின் ஆதரவு தர,செயல்வீரராக செயல்பட, வேட்பாளராக நிற்க, கொள்கைகள் மற்றும் மேலும் பல விவரங்களுக்கு www.youthpolitics.in என்றஇணைய தளத்திலும் காணலாம். தொடர்பு கொள்ள வேண்டியஅலைபேசி எண்கள்: 7871866096, 9788304668, 9962265231

 

– இளைஞர் கூட்டமைப்பு

 

 

Ilaignar Kootamaippu

 

The youth of India have taken it upon themselves to sow the seed of“social and political change” in all the 234 constituencies of Tamilnadu. Like minded youth organizations, activists and change seeking other talented young minds have come together as a “youth alliance” to meet the elections this year.This initiative was started 2 years back.

While we believe in self-sufficiency, we aim for every youngster to become a leader instead of waiting for a haloed leader to save us from everything. All well-meaning and honest individuals with a thirst to develop this society will form an “allied leadership” to face the people.

Technology and social media (Watsapp and Facebook) have been put to good use and survey and fact collecting mediums, and more than 300 people have been invited for direct interview for candidature.

A 20 member team will be responsible for the interview process. This team has been meticulously trained and prepared to look for like-minded and involved individuals true to the cause and not benefit. We expect more people to join us in our effort when they understand the interview process and trust that we will bring suitable candidates for all the 234 constituencies who are dedicated, loyal, honest and have the drive to fight the elections.

The political awareness of the youth today is alarmingly low. Tamilnadu Government has more than 1.25lakh positions to be held through elections. This includes the ward councilors, mayors and local municipal heads. However, we concentrate only on the 234 while the rest of the positions are also politically and socially significant to impact change. Ilaignar Koottamaippu aims to make the youth contest for all the local election seats this October.

The future of our country lies in the hands of enterprising, intelligent youth. Youth of India has already made big foray into various fields and now is the time to bring them into politics to drive a socio-economic change. The aim is to make Tamilnadu a benchmark state, led by a group of untainted youth.

The recent Chennai floods have shown the power of youth to the people. The campaign will be in full swing and we will make use of all the resources we could generate to make the people aware of our youth. The people make the choice to elect the right candidate and become the influencer of change.

To show your support to the youth of Tamilnadu, to become a volunteer, to become a candidate and to understand our policies and principles please visitwww.youthpolitics.in.  You can also reach us at (+91) – 7871866096, 9788304668, 9962265231.

 

Share.

Comments are closed.