Nadigar Sangam News – 17.1.16 – Statement
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 99 வது பிறந்தநாளான இன்று ( 17.01.16) அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செய்து 4வது செயற்குழு கூட்டம் 2011க்கு பிறகு முதல்முறையாக நடிகர் சங்க வளாகத்திலேயே தலைவர் திரு.நாசர் அவர்கள் தலைமையில் நடந்த்தேறியது.
இன்று நடந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்ற நிர்வாகத்தின் போது SPI சினிமாசுக்கும், நடிகர் சங்கம் CHARITABLE TRUSTக்கும் இடையே போடப்பட்ட எல்லா வகை ஒப்பந்த்த்தங்களையும் முழுவதுமாய் ரத்து செய்யும் அறக்கட்டளையின் முடிவை தென்னிந்திய நடிகர் செயற்குழு ஏகமனதாய் ஏற்றுக்கொண்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2014 – 2015க்கான வரவு செலவு கணக்குகளையும், நடிகர் சங்க CHARITABLE TRUSTக்கான 2013-2014, 2014-2015க்கான வரவு செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு மூன்று மாதங்கள் கழித்தும் முழுமையாக சமர்பிக்கததால் சென்ற நிர்வாகத்தின் தலைவர் , பொதுச்செயலாளர் , பொருளாளர் மீது பொருளாதார குற்றப்பிரிவிடம் புகார் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குருதட்சணை திட்டம் என்கிற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் பற்றியDATABASE சேகரிக்கும் திட்டத்தை வடிவமைத்த துணைத்தலைவர் திரு.பொன்வண்ணன் அவர்களுக்கும் வெற்றிகரமாய் செயல்படுத்திய கோவைசரளா, பசுபதி, ரமணா, உதயா, பூச்சிமுருகன், விக்னேஷ், நந்தா,பிரேம், ஹேமச்சந்திரன், மனோபாலா, ஜீனியர்பாலையா, ராதா அவர்களை செயற்குழு பாராட்டியும் , வாழ்த்தியும் , நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
ஏற்கனவே, துணைத்தலைவர் திரு.கருணாஸ் அவர்களின் பொருப்பில் ஏற்படுத்தப்பட்ட AROக்கள் சம்மந்தப்பட்ட நடவடிக்கைகள் மேலும் நெறிப்படுத்த சிவகாமி,குட்டிப்பத்மினி, லலிதாகுமாரி, உதயா, பிரேம்,மருதுபாண்டி, விக்னேஷ் கொண்ட உபகுழு அமைக்கப்படுகின்றது என்று செயற்குழுவிற்கு தெரிவிக்கப்படுகிறது.
சென்றமாதத்திற்க்கான சங்கம், அறக்கட்டளை வரவு செலவு கணக்குகளை பொருளாளர் திரு.SI.கார்த்தி சமர்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. செயற்குழு உறுப்பினர் திரு.பூச்சிமுருகன் நன்றி கூற செயற்குழு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.