Kamalahaasan Sings for Goutham Karthik music by Ilayaraaja
இசைஞானி இளையராஜா இசையில்
கௌதம் கார்த்திக்கிற்காக குரல் கொடுத்த
உலக நாயகன் கமல்ஹாசன்
முதன் முறையாக கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும்
“முத்துராமலிங்கம்”
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”.
இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா” என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு (முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக்) பாடல் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம். இப்படத்தின் வாயிலாக பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர்.
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தில்சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.
குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி A.செல்வம்.