Naalu Perukku Nallathuna Eduvum Thappila Official Trailer Launch on 27th.

0

Naalu Perukku Nallathuna Eduvum Thappila Official Trailer Launch on Feb 27th by Actor Suriya.

Naalu Perukku Nallathuna Eduvum Thappila

Naalu Perukku Nallathuna Eduvum Thappila

ஆல்ஃபா ஸ்டுடியோஸ் வழங்கும் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குனராக அறிமுகமாகும்  நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல”

 

டிரைலரை நடிகர் சூர்யா வெளியிடுகிறார்

 

இயக்குனர் மணிரத்னத்துடன் “அலைபாயுதே” “டும் டும் டும்” “கன்னத்தில் முத்தமிட்டால்” “கடல் ஆகிய படங்களில் இணை இயக்குனராய் பணியாற்றியாவரும்பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

அன்னக்கிளிகிழக்கே போகும் ரயில்முதல் மரியாதைகடலோரக் கவிதைகள்உதய கீதம்சின்னக் கவுண்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும்பிரபல இயக்குனர்கள் பாரதிராஜாமணிரத்னம்எஸ்.பி. முத்துராமன்ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தினோஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார்.

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியாஇவன்ஸ்ரீஜெகதீஸ்ஜார்ஜ் விஜய்அரவிந்த்அருள் ஜோதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆல்ஃபா ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வரும் 27 பிப்ரவரி அன்று மாலை 6 மணிக்கு தனது டிவிட்டரில் வெளியிடுகிறார்

கதை சுருக்கம்:

பிரபு வயசு 23அப்பா சப்-இன்ஸ்பெக்டர்நேர்மையானவர். அம்மா இல்லாத பிள்ளை. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த பைக் விபத்தில் இறந்து போன அண்ணனின் நண்பர்களான அணில்ஸ்ரீதர்,ஜானிஆகிய மூவர் மட்டும் தான் பிரபுவின் தற்போதய உறவுகள்.

மலேசியாவில் இருக்கும் நண்பன் ஆனந்த் உதவியுடன் கோலாலம்பூரில் செட்டில் ஆக வேண்டும் என்கிற பிரபுவின் எண்ணத்திற்கு தேவைப்படும் பணம் நேர்மையான அப்பா மூலம் கிடைக்காது என்பது பிரபுவிற்கு நன்றாகவே தெரியும். அதனால்,தன் நண்பர்களான அணில்ஜானி மற்றும் ஸ்ரீதருடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வரும் பிரபுஅதன் முலம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்தான். சந்தோஷமாகவும் இருந்தான். ஆனால் ஒருநாள் எல்லாம் தலைகீழாய் மாறியது. “கூடா நட்பு கேடில் முடியும்” என்கிற பழமொழிக்கு ஏற்பஇந்த மூவரின் நட்பே பிரபுவிற்கு எமனாக மாறியது.

தன் கழுத்தை வெட்ட வந்த அரிவாளிடமிருந்து பிரபு குனிந்து தப்பினானாஅல்லது அரிவாளிக்கு கழுத்தை கொடுத்தானா என்பதினை விறுவிறுப்பான திரைக்கதையிலும்சுவாரஸ்ய முடிச்சுகளுடனும் சொல்லும் படமே “நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல”

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு மற்றும் இயக்கம் – தினேஷ் செல்வராஜ்

கதை – ஆர்.செல்வராஜ் மற்றும் தினேஷ் செல்வராஜ்

ஒளிப்பதிவு – ஏ.டி.பகத்சிங்

இசை – நவீன் மற்றும் பியோன் சுரோ

படத்தொகுப்பு – சேவியர் திலக்

பாடல் வரிகள் – கலை சாய் அருண்

கலை இயக்கம் – க்ராஃபோர்டு

சண்டைப்பயிற்சி – “ரன்” ரவி

மக்கள் தொடர்பு – நிகில்

ஸ்டில்ஸ் – மனோகர்

நடனம் – சான்டி

இணை தயாரிப்பு – காஞ்சனா சிவக்குமார் மற்றும் பத்மபிரியா கோபால கிருஷ்ணன்

 

 

 

Share.

Comments are closed.