New Upcoming Film titled MO VJ Suresh ( Sun Music fame) as hero
WTF என்டர்டெயின்மென்ட் மற்றும்
மூமன்ட் என்டர்டெயின்மென்ட்
இணைந்து வழங்கும்
“மோ”
தமிழ் திரைப்பட உலகில் காமெடி கலந்த திகில் படங்கள் அதிகம் வந்த வண்ணம்
உள்ளன. அந்த வரிசையில், வித்தியாசமான தலைப்பு கொண்டு “மோ ” என்கிற
திரைப்படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்பொழுது இறுதி
கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இத்திரைப்படத்தில் சன் மியூசிக் வர்ணனையாளர் (VJ) சுரேஷ் கதாநாயகனாக
நடிக்க, காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், சூது
கவ்வும், நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், யுத்தம் செய்,
முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த செல்வா, முன்டாசுபட்டி படத்தில் நடித்த
ராமதாஸ் (முனீஸ்காந்த்), யோகி பாபு, மெட்ராஸ் மற்றும் மாரி படங்களில் நடித்த
‘Mime” கோபி, ராஜதந்திரம் படத்தில் நடித்த சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை புவன் நல்லான் R என்னும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர்
இயக்குனர் செல்வா மற்றும் ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராக
பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியனிடம் இணை ஒளிப்பதிவாளராக
பணிபுரிந்த விஷ்ணு ஸ்ரீ k ஒளிப்பதிவு செய்ய, இனிமே இப்படிதான் திரைப்படத்தின்
இசை அமைப்பாளரும், A R ரகுமானின் உதவியாளருமான சமீர் d சந்தோஷ்
இசையமைக்கிறார். கலை – பாலசுப்ரமனியன், படத்தொகுப்பு – கோபிநாத்.
இப்படத்தை WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட்
இனைந்து தயாரிக்கின்றனர்