Nila Promoters upcoming Film AADI Song Shooting Spot
நிலா புரோமோட்டர்ஸ் வழங்கும்
“ஆடி”
நாயகன் ஒரு தப்பாட்டக் கலைஞன். நாயகி அவனது சொந்த அக்கா மகள். . தப்பாட்டம்
ஆடினாலும் மிக சரியாக அக்காமகள் மீது காதல் கொண்டு வாழ்கிறான் நாயகன்..
ஊர்ப் பண்ணையாரின் மகன் ஒரு காமாந்தகன். பார்க்கும் பெண்களை எல்லாம்
படுக்கையில் வீழ்த்தும் குணம் உள்ளவன் .
தனது காமப் பார்வையை நாயகி மீதும் செலுத்த , பொங்கி எழுந்த அவள் அந்த
அயோக்கியனை எச்சரித்து விரட்டுகிறாள்.
முள் மீது சேலை விழாவிட்டால் கூட…. முள் செடி பக்கம் போன சேலை எப்படியும் கிழிந்து
இருக்கும் என்று எண்ணும் உலகை எண்ணி பயப்படுகிறாள் நாயகியின் தாய் .
“நடந்த சம்பவத்தை உன் மாமனிடம் கூட சொல்லாதே . நடக்காத சம்பவத்துக்கு ஒரு
சத்தியம் வாங்குகிறாள் தாய்.
அதோடு, பிரச்சினை பெரிதாவதற்குள் திருமணத்தை நடத்த விரும்பி,
யாரும் திருமணம் நடத்த விரும்பாத ஆடி மாதத்தில் திருமணம் செய்து வைக்கிறாள்.
ஆனால் ஆடி வேலையை காட்டியதோ இல்லையோ ஆட்கள் வேலையைக்
காட்டுகிறார்கள். வீண் ஜம்பத்துக்காக வில்லன்,” நான் எப்போதோ நாயகியை அனுபவித்து
விட்டேன் என்று கூற, அதை நம்பி அவன் நாயகியிடம் கேட்கிறான்.
தவறு ஏதும் நடக்கவில்லை என்று தெரிந்து கொண்டு நாயகன் கேட்பதாக எண்ணும் நாயகி ,
”அம்மா சத்தியம் வாங்கியதால்தான் சொல்ல வில்லை” என்று கூறுகிறாள் ,நாயகி கெட்டுப்
போனதாக எண்ணும் நாயகன் மனைவியை வார்த்தைகளால் காயப் படுத்த , மனம்
நொறுங்கும் நாயகிக்கு, அப்புறம் என்ன ஆனது…..
துன்பம் தொடரும் அவள் வாழ்வில்,
ஆனந்தம் ஆடி வந்ததா என்பதே…..
இந்த ஆடி படத்தின் கதை .`
கதையின் நாயகன் : துரை சுதாகர்
கதையின் நாயகி: டோனா
வில்லன் : கோவை ஜெயக்குமார்
காமெடியன்: பேனா மணி
இசையமைப்பாளர் : பழனி பாலு
ஒளிப்பதிவாளர்: ராஜன்
நடன இயக்குநர் : ராதிகா
பாடலாசிரியர்: விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு
சண்டைப்பயிற்சி: ஆக்சன் பிரகாஷ்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம்
எஸ்.எம்
தயாரிப்பு
துரை சுதாகர்