Kaviperarasu Vairamuthu writes on writer “PattuKottai KalyanaSundharam”

0

Kaviperarasu Vairamuthu  writes on writer “PattuKottai KalyanaSundharam”

Kavignar Vairamuthu

Kavignar Vairamuthu

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு

ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம்

தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு

சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப

ஒரு லட்சத்து முப்பதாயிரம்தான் அவன் ஈட்டிய ஊதியம்.

ஆனால் திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட

முடியாதது; பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப்புழுதியால்

அழிக்கப்படாதது.

1930 இல் ஒரு வேளாளன் வீட்டில் விவசாய வெளிகளில் அவன் பெற்றெடுக்கப்

படுகிறான். பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் அரசாங்க ஆவணங்களில் கூட

எழுத்துப் பிழையில்லாமல் எழுதமுடியாத ‘செங்கப்படுத்தான்காடு’ அவன் பிறப்பூர்

ஆகிறது. அவன் ‘குவா குவா’ சொல்லிவிழுந்த அடுத்த ஆண்டில்தான் தமிழ்

சினிமா பேசவே தொடங்குகிறது.

அவன் திரைப்பாட்டு எழுதவந்த 24 ஆண்டுகளுக்குள் புராணம் – இதிகாசம்-

சரித்திரம் – சுதந்திரப் போராட்டம் என்ற கலையின் கச்சாப்

பொருள்களையெல்லாம் செலவழித்துத் தீர்த்துவிட்டு சமூக எதார்த்தம் என்ற

தளத்தில் வந்து நிலைகொள்கிறது திரைப்படத்தேர்.

1954 இல் அந்தப் பாமரப் பாவலன் பாட்டெழுத வந்து விட்டான். அதுவரைக்கும்

கேட்காத தொனியில் உழைக்கும் மக்களின் முரட்டு மொழியில் திடீரென்று வந்து

மிரட்டுகிறது அவன் பாட்டு.

அன்று ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த உடுமலை நாராயணகவியும் தஞ்சை

ராமையாதாசும் தங்கள் உணவுமேஜையில் பட்டுக்கோட்டையைப் பரிமாறிக்

கொள்ளும் அளவுக்குச் சில மாதங்களிலேயே அவன் பரபரவென்று பரவுகிறான்.

கேட்ட சொற்கள்; கேளாத பொருள். சந்தம் பழையது; சக்தி புதியது. பல்லவி

எழுதமட்டும் தாமதம் செய்கிறான். பிறகு கோடைமழையாய்க் கொட்டிவிடுகிறான்.

படிக்காத பயலுக்கு எப்படி வந்தது இந்தப் பாட்டு வெறி? திரையுலகம் திகைக்கிறது

வேளாண்வெளிகள் தந்த பட்டறிவு – பாவேந்தர் தந்த மொழியறிவு – கம்யூனிசம்

கற்பித்த கருத்தறிவு – இந்த மூன்றையும் உள்வாங்கி எரிந்த அவனது உயிர்ச்சுடர்.

நானறிந்தவரை இந்த நான்கு பொருள்களே பட்டுக்கோட்டையின் முதலும்

மூலமும்.

பாட்டெழுத வருவதற்கு முன்பு அவன் பார்த்த தொழில்கள் பதினேழு என்கிறார்

ஜீவா.

விவசாயி – மாடுமேய்ப்பவன் – மாட்டுவியாபாரி – மாம்பழ வியாபாரி – இட்லி

வியாபாரி – முறுக்கு வியாபாரி – தேங்காய் வியாபாரி – கீற்று வியாபாரி – மீன்

நண்டு பிடிக்கும் தொழிலாளி – உப்பளத் தொழிலாளி – எந்திர ஓட்டுநர்- தண்ணி

வண்டிக்காரன் – அரசியல்வாதி – பாடகன் – நடிகன் – நடனக்காரன்- கவிஞன்.

வாழ்வியல் கூறுகளையும் வர்க்க அடுக்குகளையும் அவன் பார்த்த 17

தொழில்களும் பாடம் புகட்டியிருக்கக்கூடும்.

பாவேந்தர் என்ற வேடந்தாங்கலில் இந்தப் பட்டுக்கோட்டை என்ற பாட்டுப்

பறவையும் பாடிப்பாடிப் பழகியிருக்கக் கூடும்.

“ஏ ஆம்பளப்பயல்களா! இங்க பாருங்க ஒரு பொண்ணு என்ன போடு

போட்டுருக்கான்னு” பாவேந்தர் ஒரு கவிதைத் தாளெடுத்துத் தன் மாணவர்களுக்கு

நீட்டுகிறார். படித்தவர்கள் வியக்கிறார்கள். இயற்றியவர் பெயர் ‘அகல்யா’

என்றிருக்கிறது. அங்கிருந்த கல்யாண சுந்தரம் தனக்குள் சிரித்துக் கொள்கிறான்.

அருணாசலம் பிள்ளை மகன் கல்யாணசுந்தரம்தான் தன் பெயரை ‘அகல்யா’ என்று

பெண்படுத்தியிருக்கிறான். முளைவிடும் போதே பாவேந்தரால் பாராட்டப்

பெற்றதில் விண்ணோக்கி வளரவேண்டும் என்ற வெறி விளைந்திருக்கக் கூடும்.

அவன் வளர வளர தஞ்சை மாவட்டம் பொதுவுடைமைப் போர்க்களமாய்

வளர்கிறது. நிலப்பிரபுத்துவத்தால் கெட்டிப்பட்ட சமூகம் கிளர்ச்சிகளால்

உடைக்கப்படுகிறது. சீனிவாசராவ் தலைமையிலான விவசாயிகள் சங்கம்

விஸ்வரூபமெடுக்கிறது. அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட கம்யூனிஸ்ட்

தலைவர்கள் விதைகளைப்போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

வடபாதிமங்கலங்களும் குன்னியூர்களும், மூலங்குடிகளும், ராவ் பகதூர்களும்

மிரட்சியடையும் அளவுக்குப் புரட்சி வெடிக்கிறது.

உழைக்கும் மக்களிடம் வேர்வையாகவும் ரத்தமாகவும் வடிந்த அந்தப் புரட்சி,

ஒருவனிடம் மட்டும் தமிழாக ஒழுகுகிறது.

பாரதிதாசன் சொல்லித்தந்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை-

“யாருமேல கீறினாலும்

ரத்தம் ஒண்ணுதானே

Share.

Comments are closed.