Nadigar Sangam wishes Rajinikanth for receving “PADMAVIBHUSHAN”
நடிகரும்,நடிகர் சங்கத் தலைவருமான,நாசர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-தை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு, ‘பத்மவிபூஷன்’ விருது பெற்றமைக்காக நடிகர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் அவர் 17ஆம் தேதி நடக்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வரவேண்டும் என்கிற அழைப்பையும் விடுத்தார். சூப்பர்ஸ்டாரும், வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, 17ஆம் தேதி,கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
‘பத்மவிபூஷன்’ விருது பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பாராட்டி,நடிகர் சங்கம் சார்பில்
பாராட்டுக்கடிதமும் அனுப்பப்பட்டது.

