Nithin Sathya in upcoming film “PANDIYANODA GALLATTA THAANGALA”
“PAANDIYODA GALATTA THAANGALA”
A mansion house is built with numerous box rooms; that is where the three Musketeers (Friends) live. But due to their poor financial status, they decide to play hide and seek with the landlord in paying their rental debts.
Frustrated landlord orders his mansion watchman to take in charge for collecting the rental debts from the three young men. To escape from the arrogance and violence of the watchman, they plan to play a skit with him.
Accordingly, the three friends mesmerizes the watchman for a cocktail party and the party goes well until the drunken watchman slips from the top floor and dies instantly.
The spirit of the dead watchman haunts the men and what happens after that is ‘PANDIYODA GALATTA THAANGALA’
This Horror comedy film is produced by ‘Vikoshiya Media Pvt.Ltd’ and directed by ST Guna Segaran. The film stars Nithin Sathya and Raksha Raj in lead roles whereas Singampuli, Yogibabu, Mayilsamy, Iman Annachi, Manobala play supporting roles. Suresh’s cinematography and Sugumar’s music promises to add more thrill to the film.
“பாண்டியோட கலாட்டா தாங்கல”
‘புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். ஆனால், பல மாதங்களாக பணத்திற்கு திண்டாடி வரும் அவர்களால் வாடகை பணத்தை செலுத்த இயலவில்லை. பலமுறை, பல வழிகளில் பணத்தை வசூலிக்க முயற்ச்சித்த குடியிருப்பின் உரிமையாளர்க்கு தோல்வி தான் மிச்சம்.
“இனி என் வழி இவர்களுக்கு சரி படாது; நமது காவலாளியின் வழி தான் இவர்களுக்கு பொருந்தும்” என எண்ணி, பணம் வசூலிக்கும் பொறுப்பை தனது காவலாளியிடம் ஒப்படைக்கிறார் குடியிருப்பின் உரிமையாளர். காவலாளியின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன மூன்று நண்பர்களும், அவனை சமாளிக்க, திட்டமிட்டு அவனுக்கு மது விருந்து அளித்தனர். போதை தலைக்கேறிய காவலாளியோ, கால் தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறான்.
“இந்த மூவரும் தான் என் சாவிற்கு காரணம்” என்று கருதி காவளியின் ஆவி அவர்களுக்கு தொடர்ந்து கொடைச்சல் கொடுத்து வந்தது. ஆவியிடம் இருந்து தப்பிக்க, பேய்கள் காப்பகம் நடத்திவரும் ‘பக்கிரிசாமியை’ நாடினர் மூவரும். ஆனால் காவலாளியின் ஆவியோ, காப்பகத்தில் இருந்த மற்ற ஆவிகளை விடுதலை செய்து, ஒன்றுகூடி, அவர்களுக்கு மேலும் தொல்லைகளை கொடுத்தன.
இந்த ஆவிகளின் பிடியில் இருந்து மூவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைபடத்தின் கரு.
‘விகோசியா மீடியா நிறுவனம்’ வெளியிடும் இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். மேலும் சுரேஷின் ஒளிப்பதிவும் , சுகுமாரின் இசையும் படத்திற்கு கூடுதல் திகில் ஊட்டும் என எதிர்ப்பார்க்க படுகிறது. ‘நிதின்சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் சிங்கம்புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
CAST AND CREW
Director – S.T. Gunasegaran
Producer – Manikandan
Producer – Nagashwaran
DOP – Suresh
Hero – Nithin Sathya
Heroine – Raksha Raj
Other Cast – Mayilsamy
Imman Annachi
Manobala
Singam Puli
Yogi Babu