Actor Nazar President of Nadigar Sangam gets Doctorate from Vels University
நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ! வேல்ஸ் பல்கலைக்கழகம்
வழங்குகிறது
பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர்
சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச்
சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம் தேதி happy wheels காலை 9 மணியளவில்
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கி கௌரவிக்க உள்ளது. தனது
6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985
ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள் “கல்யாண அகதிகள்” என்ற
திரைபடத்தில் நடிகராக அறிமுகபடுத்தினார். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில்
தமிழ்,ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் 400 க்கும்
மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது .
இவ்விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவாகும்.
இவ்விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி k.கணேஷ்
தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு
விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர்
.P.S.சவ்ஹான் அவர்கள் பட்டம் வழங்க உள்ளார்