Arjun Produce & Directs A New Film Titled “KAADHALIN PON VEEDHIYIL”
அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும்
“காதலின் பொன் வீதியில்”
கதாநாயகனாக சந்தன் அறிமுகமாகிறார்
எண்ணற்ற பல வெற்றிப் படங்களை ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக தயாரித்து இயக்கி நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்முறையாக ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
“காதலின் பொன் வீதியில்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.
நடிப்பு கல்லூரியில் பயின்று, நடிப்பிற்கு தேவையான அனைத்து துறைகளிலும், தொடர்ந்து 6 ஆறு மாதம் முறையே happy wheels பயிற்சி பெற்ற நடிகர் சந்தன் முதன்முறையாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சந்தன், ஐஸ்வர்யா அர்ஜுன் இவர்களுடன் இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, “மொட்டை” ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இளமை ததும்பும் காதலை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஆக்ஷ்ன் மற்றும் காமெடி கலந்து உருவாகிறது “காதலின் பொன் வீதியில்”.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 22 முதல் சென்னையில் துவங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற்று பின்னர் ஹய்திராபாத், டெல்லி, மூம்பை, தர்மசாலா, லடாக் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
ஒளிப்பதிவு – H.C.வேணு கோபால்
இசை – ஜெஸ்ஸி கிப்ட்
படத்தொகுப்பு – கே கே
கலை இயக்கம் – சசிதரர்
சண்டை பயிற்சி – “Kick Ass” காளி
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு மேற்பார்வை – கே.கவிசேகர்
இணை தயாரிப்பு – பாலாஜி
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்