Actress Santhini is extreme happy on characters in movies
மகிழ்ச்சியின் உச்சியில் நடிகை சாந்தினி
happy wheels src="http://cineinfotv.com/wp-content/uploads/2016/07/asi11.jpg" alt="asi11" width="250" height="376" srcset="https://cineinfotv.com/wp-content/uploads/2016/07/asi11.jpg 250w, https://cineinfotv.com/wp-content/uploads/2016/07/asi11-199x300.jpg 199w" sizes="(max-width: 250px) 100vw, 250px" />
அழகு ஒரு வரம் என்றால் திறமை என்பது மற்றொரு வரம். இவை இரண்டும் ஒரு சேர வந்தால் எவரும் வெற்றியை சுலபமாக பெற்றுவிட முடியும். நடிகை சாந்தினி அழகும் திறமையும் கைசேர்ந்த நடிகை என்றால் அது மிகையாகாது.
கே.பாக்யராஜின் இயக்கத்தில் சாந்தனுவுடன் “சித்து +2” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் பின் தனக்கே உரித்தான முத்திரை நடிப்பால் தொடர்ந்து சமீபத்தில் வெளியான வில் அம்பு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமலுடன் “மன்னர் வகையரா”, சிபிராஜுடன் “கட்டப்பாவை காணோம்”, பரத்துடன் “என்னோடு விளையாடு”, வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனாவின் இயக்கத்தில் “பல்லாண்டு வாழ்க”, நடன இயக்குனர் கௌதம் இயக்கத்தில் “கண்ணுல காச காட்டப்பா”, இயக்குனர் அமீரின் தயாரிப்பில் “டாலர் தேசம்”, “தாமி”, கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடித்த சந்தோஷுடன் “நான் அவளை சந்தித போது”, நவின் கிருஷ்ணா, கீர்த்தி சுரேஷுடன் “அய்னா இஷ்டம் நூவு” எனும் தெலுங்கு படம் என வித்தியாசமான கதைகளங்கள் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நடிக்கும் படங்கள், தனது நடிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாய்ப்பளிப்பதால் மகிழ்ச்சியில் உச்சியில் உள்ளார் நடிகை சாந்தினி.