Mega Star Chiranjeevi launched the teaser of Inkokkadu
Mega Star Chiranjeevi launched the teaser of Inkokkadu
Mega Star Chiranjeevi launched the teaser of Inkokkadu, Telugu dubbed version of Irumugan starring Vikram, Nayanthara, Nithyamenen and others directed by Anand Shankar and produced by Shibu Thameens.
The event happened in the recently concluded 2 days star studded SIIMAAwards held in Singapore with major participation of film celebrities from Tamil, Malayalam, Telugu and Kannada.
The Irumugan team were in jubilant mode when the mega star chiranjeevi garu himself asked for the repeat telecast of teaser amidst huge applause
happy wheels dir="ltr" style="color: #222222;">
ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி
சீயான் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் “இருமுகன்” படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரைஆந்திராவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி வெளியிட்டார்.
விக்ரம், நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் இப்படத்திற்கு தெலுங்கில் “இன்கோகடு” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இன்கோகடு படத்தின் டீசரை வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பலத்த வரவேற்பால் மீண்டும் ஒருமுறை டீசரை ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருமுகன் படத்தில் விக்ரம், நயன்தாரா உடன் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.