Upcoming Movie “AMMAAVASAI” Song Shooting
ஜெயா பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய் ஆகாஷ்
மற்றும் ஐந்து கதாநாயகர்கள் நடிக்கும்
“அமாவாசை “
ஜெயா பிலிம்ஸ் தயாரிப்பில் “அமாவாசை “எனும் புதிய திரைப்படம்
திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது.
கதைச்சுருக்கம் : தமிழ்நாட்டு இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும்
ஒரு திகில் இசை திரில்லர் படம்.
இப்படத்தின் கதாநாயகர்களாக ஜெய்ஆகாஷ் , நுபுர் மேத்தா , ராஜேஷ்
விவேக் , ஜீவா , ஷ்ராவன் , ஆகியோர் நடித்துள்ளார். கதாநாயகிகளாக
சாக்க்ஷி ,ஷோகன் , ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா ,முமைத்கான் ,ரூபி
கான்,சீமாசிங் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் ,உதய்பூர்,ஜோத்பூர் ,சென்னை அதன்
சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட்
இசையப்பாளரான சையத் அஹமத் இசையில் 6 பாடல்கள் இடம்
பெற்றுள்ளன .சென்னை ஸ்டார் ஸ்டுடியோவில் காட்சிகளுக்கு நாராயண
பாபுவால் டப்பிங் செய்யப்பட்டு , ஒரு பாடலுக்கு பாடகர் கானா வினோத்
பாடியுள்ளார் .
இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில்
வெளியிடப்படுகிறது. அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவுற்ற
நிலையில் இந்தப்படம் ஆகஸ்ட் மாதம் 2016 ல் திரைக்கு வருகிறது.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு மற்றும் எழுத்து – இயக்கம் : ராகேஷ் சவந்த்
வசனம் : பாபா
இசை : சையத் அஹமத்
ஒளிப்பதிவு : டேவிட் பாசு
எடிட்டிங் : அனில் பந்து
மக்கள் தொடர்பு : செல்வரகு