Vasanth TV Top Star Singers
பாடும் திறமையாளர்கள் தங்கள் திறமையை உலகிற்க்கு வெளிக்காட்ட வசந்த் தொலைக்காட்சி
அமைத்துக் கொடுத்த ஓர் பிரம்மாண்ட மேடை “டாப் ஸ்டார் சிங்கர்”. தமிழகத்தின் முக்கிய
மாவட்டங்களான கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, மற்றும்
சென்னையில் நடைப்பெற்ற குரல் தேர்வுகளில் சுமார் 2500 க்கும் மேற்ப்பட்டோர் தங்கள்
திறமையை பதிவு செய்தனர். அதில் இருந்து அசாத்தியமாக பாடும் 30 திறமையாளர்கள்
போட்டியாளர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு ஃஃபோக், வெஸ்ட்ர்ன், க்லாசிகல்,
புதுப்பாடல், சோகப்பாடல், காதல் போன்ற சுமார் 13 சுற்றுகளை கடந்து, 11 போட்டியாளர்கள்
நேரடி அரையிறுதிப் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே குறைவான
மதிப்பெண் பெற்று போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு
வைல்டுகார்ட் சுற்றின் மூலம் மறு வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் இருந்து 3 போட்டியாளர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு அரையிறுதிக்கு அனுப்பப்பட்டனர். மொத்தம் 14 போட்டியாளர்கள்
அரையிறுதி சுற்றில் மோத தயாராகினர்.
அரையிறுதி சுற்றில் மொத்தம் டுயட் ரவுண்ட், இளையராஜா ரவுண்ட், ஏ.ஆர்.ரஹமான் ரவுண்ட்
என மூன்று நிலைகள் இருந்தன. ஒவ்வொரு நிலையின் முடிவில் 3 பேர் எலிமினேட் ஆக்கப்பட்டு,
மூன்றாவது நிலையின் முடிவில், இறுதிச்சுற்றில் மோதப் போகும் அந்த 5 அசாத்தியமான
போட்டியாளர்கள் யார் யார் என அறியப்பட்டது. அதன்படி ம்துரையை சேர்ந்த ஷ்ரவன்
நாராயண், புதுச்சேரியை சேர்ந்த பிரசன்னா ஆதிசேஷா, சென்னையை சேர்ந்த அஜய் கிருஷ்ணா,
விஜய லட்சுமி, மற்றும் அனுஷா ரவி ஆகிய 5 போடியாளர்கள் டாப் ஸ்டார் சிங்கரின் இறுதிச்
சுற்றில் மோத உள்ளனர். இப்போட்டியின் இறுதிச்சுற்றிலும் அன்ப்லக்ட், தீம் மெட்லெ, ஃப்ரீ
ஸ்டைல் என மூன்று புதுமையான நிலைகள் உண்டு. இம்மாபெரும் போட்டியில் வெற்றிப் பெறும்
முதல் மூன்று போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக 60 லட்சம் மதிப்புள்ள வீடு, இரண்டாவது
பரிசாக 10 லட்சம் மதிப்புள்ள தங்கம், மூன்றாவது பரிசாக புத்தம் புதிய கார் காத்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக திரைப்பட இசையமைபாளர் பரத்வாஜ் மற்றும் பின்னனிப் பாடகி
அனுப்பமா பங்கேற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் இசையமைபாளர் தினா, பின்னனி
பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா, ஏ.ஆர்.ரெஹானா, மஹதி, நித்யஸ்ரீ மகாதேவன்,
எஸ்.என்.சுரேந்தர், கங்கா, ரீடா, பாலக்காடு ஸ்ரீராம், ஆலப் ராஜு போன்ற பல்வேறு சினிமா
பிரபலங்களும் இசை ஜாம்பவாங்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இந்நிகழ்ச்சியை
சிறப்பித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு
ஒளிப்பரப்பாகி வருகிறது. இப்போட்டியின் இறுதிச்சுற்று வரும் ஜுலை 18 ஆம் தேதி முதல் 22
ஆம் தேதி வரையிலும், 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் இறுதிச்சுற்றின் முடிவுகளோடு
மாபெரும் பரிசுகளை வெல்ல போகும் அந்த டாப் ஸ்டார் சிங்கர் யார் என்பதும் தெரியவரும்.
MANAVAI BHUVAN – PRO
VASANTH TV
90030 – 47799