Actress “NIVEDHA BOTHRAJ” of Orunaalkoothu fame
சென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ் அசல் அக்மார்க் மதுரைக்கார தமிழ்பொண்ணு. பிறந்தது மதுரை வளர்ந்ததும் படித்ததும் துபாயில். இருப்பினும் தமிழ் கலாச்சாரமும் அழகும் குறையவில்லை. மிஸ் இந்தியா துபாய் ‘பட்டம்’ வென்ற நிவேதாவின் புகைப்படங்கள் ‘ஒரு நாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் கண்ணில்படவே, அதுவே நிவேதாவின் சினிமா பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழியானது. சினிமா மீது மோகமிருந்தாலும் தான் சினிமாவில் நடிப்பேன், நடிகையாவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது என்கிறார் புன்னகையுடன்.
“டைரக்டர் நெல்சன் பலபேரை அழைத்து படத்தின் கதாநாயகி தேர்வுக்காக ஆடிஷன் வைத்திருந்தார். அவர்களில் நானும் ஒருவன். இறுதியாக அந்த கதாபாத்திரத்திற்கு நான்தான் பொருந்துவேன் என்று அவர் என்னை தேர்வு செய்தது எனக்கு இன்ப அதிர்ச்சியும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமும், ஆகும்படத்தின் வெற்றி எனக்கு தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. ‘ஒரு நாள் கூத்தில் எனது கதாநாயகி வேடத்தையும், நடிப்பையும், ரசிகர்களும், ஊடகங்களும் பாராட்டியது எனக்கு கிடைத்த வெகுமதியாக கருதுகிறேன். நல்ல வேடங்கள் செய்ய வேண்டும் நல்ல நடிகை என்று பேரும் புகழும் பெறவேண்டும் என்பதே என் லட்சியம்’.
ஒரு நாள் கூத்து பார்த்து தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மொழிகளிலிருந்தும் எனக்கு ஆஃபர்கள் வந்துள்ளது. கதை தேர்ந்தெடுபதில் happy wheels நான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறேன்” என்றவரிடம் தமிழ் சினிமாவில் நெம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டபோது,
“அதிக எண்ணிக்கையில் படம் நடிப்பது எனது குறுக்கோள் அல்ல. எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெறவேண்டும். சினிமாவும், ரசிகர்களும் நல்ல நடிகை என்று புகழ வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என் நடிப்பு திறமை வெளிப்படுத்த உதவும் அந்த மாதிரி கதாநாயகி வேடம் என்னை தேடி வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது” என்றார்.
சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக துபாய் வாசியான இவர் சென்னை வாசியாக மாறியுள்ளார் என்பது நிவேதா பெத்துராஜ் பற்றிய தகவல்.